பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 இவரது முதல் படைப்பு மதுவையோ மனெ ஹாளோ (திருமணம் அல்லது அழிவு) எனும் இன்பியல் நாடகமாகும் தமது பதிாைறாவது வயதில் எழுதப்பட்ட இந்நாடகம அன்றைய கன்னட நாடக மேடைகளில் புகழ் பெற்று விளங்கியது. அக்கால பிரபல நாடக நடிகர்கள் பங்குகொண்ட அந்நாடகத்தில் இவரும் ஒரு நடிகராக நடிததது குறிப்பிடத்தக்கது. இவரது முதல் படைப்பான நாடகம் இவரைப் புகழேணியில் ஏற்றியபோதிலும், இவர் தொடர்ந்து நாடகங்களை உருவாக்க முனையாது சிறுகதைகளை எழுதுவதில் தம் கவனத்தைச் செலுத்தலானார். நாளடை வில் இவரது எழுதுகோல் புதினத் துறையை நோக்கித் திரும்பலாயிற்று இவரது முதல் புதினம் 'ஜீவன யாதரே' (ஜீவ யாத்திரை) 1938ஆம் ஆண்டில் வெளிவந்தது. அன்றிலிருநது இதுவரை இவரது பேனாமுனை நூற்றிரு பதுக்குமேற்பட்ட சமூக வரலாற்றுப் புதினங்களை எழுதிக்குவித்து கன்னட புதின இலக்கியத் துறையின் முடி சூடா மன்னராக்கியது. சமுதாயத் தனி மனிதவாழ்வில் இழையோடிக் கிடக்கும் புதிரான விஷயங்களைபிரச்சினைகளை கதைக் கருவாகக் கொண்டு கதை புனை வதில் வல்லவரான இவர் வாழ்க்கையில் கீழத்தரமானவை என பிறர் கருதி ஒதுக்கும் விஷயங்களையும் கவர்ச்சியாக வும், பிறர் கவனத்தைக் கவர்ந்திழுக்கத் தக்கதாகவும் தம் படைப்பு வழி உருவாக்கி உணர்த்துவதில் வல்லவர். "ஷனி சந்தானா (சணியின பிறப்பிடம) 'நக்ன சத்யா" (அப்பட்ட உண்மை) போன்ற புதினங்களில் விலை மாதர் களின் கொடுமைமிகு வாழ்வின போக்குகளை அழகுற விளக்கியுள்ளார். அதனால இவை எதிர்ப்புககாளானதில வியப்பேதுமில்லை இவர் தமது கலையுலக அனுபவச் சாயல்களை வலி மையான எழுத்துருவங்களாக வெளிப்படுத்துவதில் தனித்