பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 லாற்றுப் புதினமான விஜயநகர சாம்ராஜ்யா இவரது வரலாற்றுப் புலமைக்கும் அதனைக கவர்ச்சியூட்டும கதையுருவில் அறபுதமாகச் சித்தரிக்கும் ஆற்றலுக்கும இணையற்ற எடுத்துக்காட்டாகவுள்ளது. வெறும் வர லாற்றை மட்டும சித்தரிப்பதோடு இவர் எழுத்துப்பணி அமைந்துவிடவில்லை. வ ர லா ற் று நிகழ்ச்சிகளைக் கொண்டு வாழும் தலைமுறைக்கு வேகமும் விறுவிறுப்பும் ஊடட இவரது எழுதுகோல் தவறவில்லை எனபதறகுத் தக்க சான்றாக அமைந்துள்ளது. சித்துார் ராணி சென் னம்மா' எனற மறறொரு வரலாற்றுப் புதினம், பாரத விடுதலை உணர்வுக்கு வேகமூட்டிய நிகழ்ச்சியாக வரலாற் றாசிரியர்களால் கருதப்படும் ஜான சி ராணிக்கும் முனனரே 18ஆம் நூறறாண்டில் பெல்காமுக்கு அருகில் உள்ள சிறியதோர் பகுதியை ஆண்டு வந்த சிததுர் ராணி சென்னம்மா, ஆங்கிலேயர்களை எதிர்த்து வீறுடன் போரிடட நிகழ்ச்சிகளை விவரிக்கிறது இப் புதினம். மணிவிழாக் கண்ட அ. ந. க்ரு, பதினைந்திற்கு மேற பட்ட நாடகங்களையும் பத்திற்கு மேற்பட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களையும், நூற்றிருபதுக்கு மேற்பட்சமூக வரலாற்றுப் புதினப் படைப்புக்களையும், ஏராள மான சிறு கதைகளையும் கட்டுரைகளையும் எழுதிக குவித்துள்ளார். இவரது அடிச் சுவட்டைப் பின்பற்றும் இளைஞர் கூட்டமொனறு இனறு கன்னட இலக்கிய உலகில் பீடுநடை போட்டு வருகிறது. இநத இளைய தலைமுறையின படைப்புகளில் அ. ந. கரு வின் செல்வா க் கைப் பரக்கக் காணலாம். இவரது எளிய, ஆனால் கவர்ச்சிமிக்க மொழியும, எதனையும் தெளிவுபட விளக்கவல்ல நீரொழுக்குப் போன்ற நடையும் படிக்கும் வாசகர்களை எளிதாக இவரது சிந்தனைப் போக்குடன் ஒன்றிவிடச் செய் கின்றன. கம்பீரமான போக்கில் கதை சொல்லும் திறன்