பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. புட்டசாமையா கன்னட இலக்கியத் துறைக்கு-குறிப்பாக நாடக இலக்கியத் துறைக்கு அரும் டணியாற்றி வநதுள்ள ஒரு சில கன்னட எழுத்தாளர்களுள் திரு. புட் டசாமையாவும் ஒருவராவார். சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன்பே கன்னட நாடக இலக்கியத்துறைக்கு அமரத்துவப் படைப் புக்கள் பலவற்றை உருவாக்கித் தந்து வளங் கூட்டியவர் இவரது எழுத்துத் திறமையால் நாடக இலக்கியத் துறை வளமும் வனப்பும் கொண்டு பீடுநடை போட்டு வளரத் தொடங்கி, நாடக உலகில புதுமைகள் பல தோன்றக் காரணமாக அமைநதது எனலாம். இளையோர் முதல் முதியோர் வரை எல்லாப் பருவத தினரிடையேயும் ஒரளவு புகழபெற்றுத் திகழும் இவர் கன்னட நாடக இலக்கியத்துறைக்கு அரிதாகக கிடைத்த நாடக மாமணி என நாற்பதாண்டுகட்கு முன்பே இலக்கி உலகால் மகுடஞ் சூட்டி பாராட்டப் பெற்றவரார். இவரது இலக்கியச் செல்வாக்கால் உருவாகி இவர் வகுத்த பாதையில் இன்று பீடுநடை போட்டு வரும் நாடக எழுத்தாளர்கள் ஏராளம. இவரும் வேறுசில கன்னட எழுத்தாளர்களைப் போனறு பத்திரிகைத் துறையினின்றும எழுத்துத் துறைக்கு வந்தவராவார். அப்போதைய கன்னடப் பத்திரிகைகள் அனைத்தோடும நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவர் தனது முதல் நாடகப் படைப்பை 1930ஆம் ஆண்டில உருவாக்கினார். இது மாமனனர் ஷாஜஹானின் வாழ்க்கை திகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாடகமாகும் இஃது இவரது