பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1Ꭵ0 கவர்ச்சியும் கொண்டவராக இருந்தபோதிலும் ஒரு குறிப் பிட்ட வளையத்திற்குள் தன் உணர்வுகளையும் சிந்தனை யையும் சிறைப்படுத்திக் கொள்ளும் குறுகிய மனப் போக்கை இவரிடம் காண முடியவில்லை. கால வோட்டத் திற்கேற்ற மாற்றங்களையும் வரவேற்கவோ அவற்றைக் கருவாகக் கொண்டு தம் கவிதை மாலைகளைத் தொடுத்து புத்துருக்கொண்டு விளங்கும் கன்னட இலக்கியக் கன்னிக் குப் புதுப்பொலிவூட்டவோ தவறவில்லை தமது சமயக் கருததுக்களை மதிப்பதுபோலவே பிற சமயக் கருத்துக் களையும் அச்சமயங்களை மக்களிடையே பரப்ர் அத் தலைவர்கள பட்ட அல்லல்களையும் அற்புதமாகப் படம் பிடிததுக் காடடுவதில் மிகச் சிறநது அளங்குகிறார்: வெறும் சமயப் போர்வையில் மயங்கி நிற்காது அதன் உயிர்ப்புக் கொள்கைகளிடத்தே மட்டும் தன உள்ளத்தைப் பறி கொடுத்தவர் கோவிந்தபை. இவரது பாடல்களுள் மிகச் சிறந்ததாகத் திறனாய் வாளர்கள் கருதும் "கொல்கொதா' என்ற நூல் ஏசு பெருமானின் வாழ்க்கையை நெஞ்சுருக விளக்குவதாகும். ஏசுநாதரின் அளவிட முடியா மன உறுதி, அவர் அனு பவித்த துன்பங்கள், இடுக்கண ஏற்பட்டபோதெல்லாம அவர் உள்ளததே பொங்கி நின்ற சகிப்புத்தன்மை ஆகிய வற்றையெல்லாம் அழகுறச் சித்தரிப்பதே இக்கவிதைப் படைப்பு. இதே போன்று கெளதம புத்தரின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சிறு சம்பவத்தை மையமாக வைத்து வைகாசி" எனும் பெயரில் கதைப் பாடல் ஒன்றை எழுதியுள்ளார் இந்த இரண்டு பெரியார்களின் வாழ்வை விளக்கும் இந்நூல்களின் மூலமாக மனித ஆத்மா என்பதை சமய உணர்வின் அடித்தளமாகவோ அல்லது ஏதோ ஒரு நினைவாற்றலின மையம் என்றோ மட்டும் கொள்ளாமல் புழுதியிலே புதைந்து கிடக்கும் ஒரு