பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னட இலக்கியம் மேற்கே அரபிக் கடலையும் கிழக்கே ஆந்திர மாநிலத் தையும் வடக்கே மகாராஷ்ராவையும் தெறகே கேரளா வையும் தமிழ்நாட்டையும் எல்லைகளாகக் கொண்டுள்ள கர்நாடக மாநிலத்து மொழியான கன்னடம் தமிழுக்கு அடுததபடியான பழம் பெருமை மிக்க மொழியாகும். ராஷ்ட்ரகூடர்கள், சாளுக்கியர்கள், ஹொய்சாலர் கள், விஜயநகர சக்கரவர்த்திகள் எனப் பல்வேறு ஆட்சி யாளர்களால கர்நாடகாவின் இலக்கியம், பண்பாடு, கவின்மிகு நுண் கலைகள் செழுமையாகக் காலந்தோறும் வளர்க்கப்பட்டு வந்தன என்றாலும் கவிதையைப் பற்றிய கவிராஜமார்கா (கி.பி. 825) தான் முதல் கன்னட நூலாகக் கிடைத்தது. உரைநடையில் கிடைத்த முதல் நூல் சிவக்கோட்டியாச்சார்யா எழுதிய வொட்டரா தனெ (கி.பி 925) என்பதாகும். அது ஒரு சிறுகதைத் தொகுப்பு நூல் என்பது இங்குக் கவனிககததக்கதாகும், பிற தென்னக மொழிகளைப் போன்றே கன்னட மொழியும் சமஸ்கிருதத்தின் பலமான தாக்குதலுக்கு இலக் காகி அதன் செல்வாக்கு ஓங்கிய நிலையில் கனனட இலக் கியப் படைப்புகள் உருவாயின. சமய அடிப்படையில் உருவான இலக்கியப் போக்கில் ஒரு புது அகதியாயமாக, சமுதாயக் கண்ணோட்டத் தோடு, விஜயநகர சாம்ராச்சிய அழிவுக்குப் பிறகு ஏற் பட்ட சமூக மாற்றங்களைக் கருவாகக் கொணட கவிதை களை சர்வக்ஞன் என்ற வசைக் கவிஞன இயற்றியதாக கனனட இலககிய வரலாறு கூறுகிறது.