பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வில்லையெனினும் 'நர்த்தன சாலா" (நாட்டிய அரங்கு) "வேன ராஜு போன்ற நாடகங்கள் இவரது நாடக ஆற்றலுக்குச் சான்றாகும். இன்றைய தெலுங்கு இலக்கியத் திறாய்வாளர்களில் முன்னோடி எனக் கருதப்பட்ட விசுவநாதா, நன்னய்ய, காளிதாசா, கிருஷ்ண தேவராயா போன்ற பெருங் கவிஞர்களின் கவிதைப் படைப்புக்களைத் திறம்பட ஆராய்ந்து கட்டுரைகளாக வெளியிட்டுள்ளார். இல் வாராய்ச்சிக் கட்டுரைகள் இலக்கிய அறிஞர்களால் பெரிதும் போற்றப்படுகின்றன பல்வேறு இலக்கியத் துறைகளில் தனக்கெனத் தனி யிடம் கண்டுள்ள விசுவநாதா இதுவரை நூற்றுக்கு மேற் பட்ட படைப்புக்களை உருவாக்கியுள்ளார். இவரது படைப்புக்களில் பல இந்திய மொழிகளில் குறிப்பாகத் தமிழ், கன்னட, இந்தி, வங்கமொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன. இவரது "வேயி படகலு (ஆயிரம் நாகப் படங்கள்) என்ற புதினம் டாக்டர் சி ஆர். சர்மாவினால் சிறப்பாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது இத்தனை சிறப்புகளுக்கு உரியவராக இருந்தும் இல ரிடம் சில குறைகளும் இருக்கவே செய்தன. இவரது இலக் கியப் படைப்புகளில் அளவுக்கதிகமாக சமஸ்கிருதச் சொற் றொடர்கள் இடம் பெறுவதால் பாமர மக்கள் அதனை முழுவதுமாக சுவைக்க இயலுவதில்லை. மேலும் மாறி வரும் கால ஓட்டத்திற்கெதிராக பழம் பெருமை பேசுவதி லும் புதுமையைப் போற்ற மறுக்கும் பண்பினாலும் சமூகப் பிரச்னைகளை அலசி ஆராய முற்படாததாலும் இவர் பிற்போக்காளராகவே இளம் தலைமுறையினரால் கருதப்பட்டு வந்தார். எனினும் இவருக்குள்ள இலக்கியப் பேராற்றலை எல்லோரும் ஒருமுகமாக ஒப்புக் கொண்டு போற்றுகின்றனர்.