பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரு. ரீ. பூரீ. பூர் என்ற இரண்டு எழுத்துக்களுள் மறைந்து கொண்டிருக்கும ரீரங்கம் பூரீனிவாசராவ் இனறைய தெலுங்குப் புத்திலக்கியக் கவிஞர்களின வழிகாட்டியாகத் திகழும் புரட்சிக் கவிஞராவார் இனிய பண்பும் எளிமைத் தோறறமு மும கொண்ட இக் கவிஞரின் உள்ளமோ வெடிக கும் எரிமலையும கொந்தளிக்கும் புயலும குடியிருக் கும் புரட்சிககனலாக உள்ளது ஆழ்ந்த சிந்தனையும் கற்பனை வளமும் கூர்த்த மதி யும் கொண்ட அவர் சமுதாயக் கோணல் நிலைகளைச் சாடுவதில் புரட்சிக்கவி பாரதியாராக-பாரதிதாசனாக வுமே திகழகிறார். வானத்தையே அனணாந்து பார்த்து, கவைக்குதவாத கற்பனைகளுககுக் கவிதை வடிவம் தந்து, கவிதைப் பணி யாறறி வந்த தெலுங்குக் கவிஞருலகின் கவனத்தைப் பிரத்தியட்ச உலகை நோக்கித் திருப்பிய பெருமை புதுமைக கவிஞா ரீ. ரீ. அவர்களையே சாரும். உப்பரிகை வாசிகளின் உல்லாச வாழ்வைக் கருப் பொருளாகக் கொண்டு கவிதை புனைந்து வநத கவிஞர் களின் மத்தியில் குருதியை வியர்வையாகக் கொட்டி உழைக்கும் உழவர்களையும் பிற பாட்டாளி மக்களையும கருவாகக் கொண்டு கவிதை புனைந்து அவர்களின் உரிமைக்கும் பெருமைக்கும் முரசு கொட்டிய புரட்சிக் கவிஞர் பூரீ பூரீ. தாஜ் மகாலைப் புகழ்ந்து பாடுவதில் பொருளில்லை என்று கூறும் இக்கவிஞர், அரச ஆணைக்கு அடிபணிந்து அதனைக் கட்டி முடிக்கப் பனனெடுங்காலம் கட்டாயப் பணியாற்றி உழைதத உழைப்பாளிகளையே