பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I2 கன்னட இலக்கிய வளாச்சிப் பாதையில் சமஸ்கிருதத் தின் செல்வாக்கு எப்படி வடமொழி இலக்கியங்களும் அதன் செலவாக்கோடு இணைந்த புதிய கன்னட இலக் கியங்களும் உருவாகக் காரணமாக இருந்ததோ, அதே போன்று மேனாட்டினரின வருகையின வாயிலாக மேனாட்டு இலக்கியங்களும் அவற்றின பல்வேறு வகை களும், அவற்றின செல்வாக்கினால் எழுநத இலக்கிய வகைகளையும கனனட மொழி பெற ஏதுவாயிற்று. இத் தகைய புதிய இலககிய வகைகளின மூலமாக புதிய சிந்தனைகளும் கண்ணோட்டமும் படித்தவர்களிடையே யும் படைப்பாளர்களிடையேயும் எழலாயிற்று. ஒருபுறம் ஆங்கில மொழி மூலமாக அறிமுகமான மேனாட்டு இலக்கிய வகைகளின பல்வேறு அமசங்களை அப்படியே கண்மூடித்தனமாகப் பின்பற்றி கனனட இலக் கியங்கள் உருவாக்கப்பட்டன. மறறொருபுறம் ஆங்கில இலக்கிய அமைப்புகளை கனனட மொழிககேயுரிய இலக் கிய வடிவங்களோடு இணைத்து, ஒரு சில அமசங்களில் மட்டுமே மாற்றங்களையும திருததங்களையும் ஏற்படுத்தி இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன. மொததததில் இவ் விரண்டு போக்குகளாலும் கன்னட இலக்கியம் தரத்தில் மட்டுமல்லாமல் அளவிலும் பெருக்கமடையலாயின. ஆங்கிலம போன்ற மேனாட்டு மொழிகளிலிருந்து மட்டுமல்லாது மராததி, வங்காளி, இந்தி, தமிழ் போன்ற இந்திய மொழிகளிலிருந்தும் இலக்கிய இறக்குமதிகள வெகுவாக நடைபெற்றன. பி.எம். ரீ கண்டயயா ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்த கவிதைகளும் கோலகநாத் மராத்தி மொழியி லிருநது பெயர்த்த கதை இலக்கியங்களும் இளைஞர் களிடையே படைப்பிலக்கிய ஆர்வததை ஊட்டி வளர்க்க லாயின.