பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலகும்மி பத்மராஜன் இன்றைய தெலுங்கு சிறுகதை இலக்கிய உலகில் தனித் தாரகையென விளங்குபவர் பாலகும்மி பத்மராஜா 1952 ஆம் ஆண்டில "நியூயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன்' நடத்திய அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இரண் டாம் பரிசு பெற்றதன் மூலம தெலுங்குச் சிறுகதை இலக் கியத் துறையை உலக இலக்கியங்களிடையே ஒரு தனி யிடத்தை பெறச் செய்தவர் பத்மராஜூ அவ்வாறு பரிசு பெற்ற அவரது அமரததுவ சிறுகதையான காலிவான' (சூறாவளி) இவரது சிறுகதை இலக்கியப் படைப்பாற்றல் திறனுக்குச் சரியான உரைகல்லாக அமைந்துள்ளது. மேற்குக் கோதாவரி மாவட்டத்தில் உள்ள திருப்பதி புரம் எனற கிராமத்தில் 24-6-1915இல் பிறந்த பத்மராஜு தமது ஒன்பதாவது வயதிலேயே தன் தந்தை யை இழந்து தமது தாத்நாவின் அனபாண அரவணைப் பிலே வளர்நறு வந்தார் சரியாகப் பன்னிரணடாவது வயதில் தன் தாத்தாவையும் இழந்துவிடவே இஃது சிறு வனாக இருந்த பத்மராஜாவின உள் மன உணர்ச்சிகளை பாதிக்கும் ஒரு சம்பவமாக அமைந்துவிட்டது தாத்தா வின் மரணம் ஏற்படுத்திய மன உளைவுகளைக் கவிதை யாக வடித்து மன அமைதி பெறலானார் அவர் எழுதிய முதல் படைப்பு கவிதையாகவே அமைந்தது இநதக் கவிதையிலிருந்து தான் அவரது இலக்கியப் பயணமும் தொடங்கியது மிக இளமையிலேயே மற்றவர்களுக்குக் கதை சொல் வதில் தனி ஆர்வம் கொணடவராக இருந்தார் பத்மராஜு ஆயினும் பள்ளிப் பருவ நாட்களில் எழுத்தில் வடிப்பதெல் லாம கவிதைகளாகவே இருந்தன. அவை ஆசிரியர்களிடத்