பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 என்ற தலைப்பில் வெளிவந்ததாகும் அக்காலத்தில் அவர் எழுதிய சீகடி (இருள்) என்ற கவிதை அவரது தனித் துவப் போக்குக்குக் கட்டியங்கூறும் கவிதையாகும் தாம் கூறவேண்டிய கருத்துக்களை சமுதாயத்துக்கு எடுத்துச் சொல்ல கவிதையைவிட கதை அதிலும் சிறு கதையே சிறந்த சாதனம் என்பதை உணர்ந்து தெளிந்த பத்மராஜூ சிறுகதைகளை உருவாக்குவதில் தனி ஆர்வ மும் முயற்சியும் மேற்கொண்டார் அவரது முதல் சிறு கதை 'அப்பு என்பதாகும் ஒரு குடும்பத்தில் அப்பாவும் அம்மாவும் ஒரு வேலைக்காரிக்கு அவர்களின பிள்ளையின் மூலம் ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. அந்த வேலைக் காரியைச் சுற்றி ஒடுவதுதான கதை இந்தக் கதை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு திருவேனி என்ற இதழில் வெளிவந்தது கதையின் கருவையும் உருவையும் பாராட் டிய இதழாசிரியர் அவர் தெலுங்கிலும் இதைப் போன்ற் கதைகளை எழுத வேண்டுமென பத்மராஜுக்குக் கடிதம் எழுதினார் உணமையில் இக்கதை முதலில் தெலுங்கில் எழுதப்பட்டு பிரபல தெலுங்கு இதழுக்கு அனுப்பப்பட, அவர்கள் பிரசுரிக்க இயலாது என திருப்பியனுப்பிய பின்னரே இக் கதை ஆங்கில வடிவில் "திருவேனி" இதழுக்கு அனுப்பப்பட்டு வெளியாகியது தெலுங்கு பத்திரிகையுலகில் ஆரம்ப காலத்தில் பத்மராஜூக்குக் கிடைதத வரவேற்பு அப்படித்தான் இருந்தது பத்மராஜுவின் சிறுகதைப் படைப்பாற்றல் வாசகர் மத்தியில் ஒரு புதிய விழிப்பை உருவாக்கவே தொடக்கத் தில் இவர் கதைகளை ஏற்றுக் கொள்ள மறுத்த இதழ் களெல்லாம் வருந்திக் கேட்டுப் பெற்றுச் சிறுகதைகளைப் பிரசுரிக்கலாயின இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளைப் பல பத்திரிகைகளில வெளியிட்டுள்ளார் அலற்றில் பதினைந்து