பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 நாயுடு அவர்களோடு ஏற்பட்ட தொடர் பின் விளைவாக சலம் பிரம்ம சமாஜத்தின் தீவிர உறுப்பினராக ஆனார். இக்கால கட்டத்தில் இவருக்கு ஏற்பட்ட கசப்பான அனு பலங்கள் இவரது உள் மனத்தில் உறங்கிக் கொணடிருந்த ஆவேசப் புரட்சியுணர்வை லேகமாக உசுப்பிவிட்டது. இஃது இவரது வளர்ச்சிப் போக்கில் 'பெரும் மாற்றங்கள் தோன்ற வழி வகுத்தன அநீதியின அடிப்படையில் உரு வாக்கியுள்ள சமுதாயத்தின் இனறைய போக்கு அவரைத் தீவிரமாகச் சிந்திக்கத் துண்டின உணமை வாழ்க்கைக் கும் போலியான சாதி, மதச் சம பிரதாயக் கட்டுப்பாடு களால் மூடப்பட்டிருககும வாழ்க்கைக்குமிடையேயுள்ள அகனற இடைவெளியைக் கண்டு வருந்திய அவர் பிரம்ம சமாஜத்தினின்றும் வெளியேறியதோடு கல்லுரிப் பணி யையும கைகழுவினார். பிறகு முறையான ஆசிரியப் பயிற்சி பெற்று பள்ளி மேற்பார்வையாளராகவும் பயிற்சி பள்ளி ஆசிரியர், பயிற்சிப் பள்ளித் தலைமையாசிரியர் பணிகளைப் பல காலம மேற்கொண்டார். ஆரம்ப காலத்தில் பக்தியுணர்வை ஊட்டவல்ல கட்டுரைகளை எழுதிய அவர் 1920 ஆண்டு முதல் தனக்கேயுரிய பாணியையும் நடையையும் அமைத்துக் கொண்டு தம் உளளத்தில் ஊறிவரும் புரட்சியுணர்வு களுக்கு எழுத்துருக் கொடுத்து இலக்கியம் படைக்க லானார். பிரத்தியட்ச வாழ்க்கை ப்றறிய தம் உணர்வு களையும் சிந்தனையையும் வெளியிடத் தகுந்த சாதனமாக பிற துறைகளை விட நாடகத் துறையையே அவா தொடக்கத்தில் தேர்ந்தார் 1920ஆம் ஆண்டில் வெளி வந்தது. சசிரேகா எனும் நாடகமேயாகும் பின்னர் "சத்யம் 'சிவம்’ சுந்தரம் முதலிய ஒரங்க நாடகங்களை யும் எழுதி வெளியிட்டார். சமுதாயத்தில. தாய்க்குலமாகிய பெண்ணுலகம் அடைந்து வரும் அவல நிலைகளை-கொடுமைகளை