பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கட்டுரைகளின் தொகுப்பு ஸ்திரி என்ற தலைப்பில் இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தாகூரின சிந்தனையும், மாபசான், இப்சன், டி.எச். லாரனஸ் போன்றோரின செல்வாக்கும் இவரை ஆற்றல் மிக்கக் கலைஞராக்கியுள்ளன வாழ்க்கையைப் பற்றிய இவரது 'சிந்தனைகள் உரைநடைக் கவிதை வடிவில் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது. வாழ்க்கையைப் பற்றிய உண்மை உணர்வுகளை யுணர்த்த வல்ல இவ்வுரை நடைக் கவிதைத் தொகுப்பு ஆழ்ந்தத் தததுவக் கருத்துக்களைப் பொலிவதாக அமைந்துள்ளதெனலாம். தாகூரின் கீதாஞ் சலியையும் இவர் எளிய இனிய நடையில் தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார். அவரது நாடகங்களுள் புரூரவா சரசாங்கா ஜெய தேவா முதலியனவும் புதினங்களுள் மைதானம் பிராம் மாணிகம்' விவாகம ஆகியனவும ஆழ்ந்த அனுபவ முததிரைகளோடு படைக்கப் பட்டவைகளாகும் இவற்றி ஒாடே சமுதாயம் பற்றிய சலத்தின் புரட்சி மனப் பான்மையும் பிரத்தியட்ச உணர்வுகளை அப்பட்டமாகச் சித்தரித்துக் காட்டுவதிலே இவருக்குள்ள அளவு கடந்த ஆர்வத்தையும நன்கு அறிய முடிகிறது பெண்ணுலக விடுதலைக்கு வேண்டியும் சமுதாய சீர் திருத்தங்களுச்காகவும் இவர் இலக்கியத்தைக் கையாண்ட முறை பலரது கண்டனத்துக்கு ஆளாகியது என்னவோ மறுக்க முடியாத உண்மை. அதே சமயத்தில் இளைய சமு தாயத்தின் ஆதரவும் போற்றுதலும் நாளுக்கு நாள் பெருகவே பழமைப் போக்காளர்களின எதிர்ப்புக் குரலும் கண்டனக் கணையும் நாளுக்கு நாள் கூர்மழுங்கி மறைய லாயிற்று. ஆண்-பெண் உறவுகளை-காதலைப் பற்றிய இவரது பிரத்தியட்சக் கண்ணோட்டம் ஆபாசமானது