பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வித புனைவியல் கவிதைகளை இயற்றியிருந்த போதிலும் அவைகளிடையே வடிவம், சொல்லும முறை, நுணுக்கம் இவற்றில் பெரும் வேறுபாடு உண்டு. குவெமபு இயற்கை யழகில் மயக்கம் கொண்டவராய், அதன மூலம் பெற்ற அனுபவ உணர்வுகளைப் பாட்டால் வடித்து மக்களிடை யே உலக விடட வர் பிற்காலத்தில் மக்களின வாழ்வியல் பிரச்சினைகளை அடியொற்றி படைப்பிலக்கியங்களை உருவாக்க விழைநது, தன் எழுதுகோலை புனைகதை களின்பால் திருப்பியவர் அவர் புதின இலக்கியங்களை உருவாக்கியபோது கூட அவர் ஒரு இயற்கை ஆர்வலர் என்ற உணர்வு படிப்போரிடையே எழும் வகையிலேயே அவரது படைப்பிலக்கியங்கள் அமைந்துள்ளதெனலாம். பேந்த்ரேயினுடைய கவிதைகளில் தலையாய அம்ச மாக அமைத்திருப்பது எளிமையும் வாய்மையுமாகும். பேந்த்ரேயின் மற்றொரு சிறப்பம்சம் வாழ்வியல் தத்துவங்களை சாதாரண பாமர வாசகனும் நன்கு உணர்ந்து தெளியும் வண்ணம் எளிமைப்படுததிச் சொல் லுவதாகும். ஆனால், குவெம்புவின் படைப்புகளை ஒப்பு நோக்கும்போது மற்றவாகள் தன கருததுககளை, தத்து வார்த்த உண்மைகளை எளிதாகப் புரிநது கொள்ள வேணடும் என்பதைவிட, தான் சொல்ல வந்ததை இலக் கிய வடிவில் திறப்பட சொல்லிவிட வேண்டும் எனபதிலே யே கருததாக உள்ளதை நம்மால் உணரமுடிகிறது. மேலும் குவெம்புவின் படைப்புகளில் மிக அதிகமான சமஸ்கிருதச் சொற்கள் இடம் பெற்றுள்ளன தனக்குள்ள சமஸ்கிருதப் புலமையைப் புலப்படுத்த வேணடும் என்ற வேட்கை அவரிடம் மிகுந்திருப்பதை உணர முடிகிறது. அதேசமயத்தில் பேந்த்ரேயின் படைப்புகளில் இதற்கு நேர்மாறான நிலை இருப்பதைக் காணமுடிகிறது. மொழி யடிப்படையில் பார்த்தால கன்னட மொழி வாசகர் களோடு இரண்டறக் கலக்கும் தனித்தனமை பேந்த்ரே