பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குர்ரம் ஜோஷ்வா தெலுங்கு இலக்கிய உலகில் இணையற்ற கவிக் குயி லாக-கவிததிற்ச் சிறப்புக்காக கனகாபிஷேகம கண்ட கவி மேருவாக-சமுதாயததின் மிகமிகத் தாழ்ந்த தட்டின அடிததளத்தில் பிறநதாலும் இலக்கிய ஆற்றலால் மக்களி டையே மிக உன்னத இடததைப் பெற்று பேர் பெருமை களோடு வாழ முடியும என்பதற்கு ஏற்ற எடுத்துககாட் டாக விளங்கியவர் தெலுங்கு கவிஞர் திரு குர்ரம்ஜோஷ்வா தெலுங்கு இலக்கிய வரலாற்றில் பல புதிய அத்தி யாயங்களை உருவாக்கி வளங்கூட்டிய அக்கவிஞர் பெரு மான தமது எழுபத்தாறாம் வயதில் மறைந்த செய்தியைக கேட்டபோது அவர் இனறைய புகழ்மிகு நிலையை எய்து வதற்கு முன்னால் இலக்கிய உலகில் போட்ட எதிர்நீச்சல களையும் மக்கள உள்ளத்தில் அவர் பால ஏறபட்ட மாறாத அண்மையும் மதிப்பையும் உருவாக்கிய கவிதைப் படைப்புக்களையும் அவற்றின் வழியே அவர் மனித குலததுக்கு வழங்கிச் சென்றுளள சிந்தனை வளமிகக செய்திகளையும ஒரு கணம் எண்ணிப் பார்க்காமல் என் னால் இருக்க முடியவில்லை. அவற்றை ஒருமுறை நினைவு கூர்ந்து போறறுவதே அவர்க்கு நாம் செய்யும் மிகச் சிறநத அஞ்சலியாக இருக்க முடியும். இலக்கிய உலகில் மேட்டுக் குடியினரின் ஆதிக்கம் சரிந்து கொண்டிருந்த காலகட்டத்தில புராண இதிகாச விஷயங்களுக்கு அப்பாலும் சமுதாயச் சிந்தனைகளின் அடிப்படையில் இலக்கியம் படைக்கலாம எனற எண்ணம் எழுந்து அழுததமாகக் காலூன்றி வளரத் துவங்கிய தருணத்தில் தெலுங்கு இலக்கிய உலகில் காலடி எடுதது வைத்தவர் திரு ஜோஷ்வா.