பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 திரு ஜோஷ்வா சமூகத்தில் மிகத் தாழ்ந்த-சமுதாய அந்தஸ்து எனும் ஏணியில் ஏற வாய்ப்புகளேதும் இல்லாத கிருத்துவ அரிஜனக் குடும்பமொன்றில் 1895ஆம் ஆண்டில் பிறந்தாராயினும் அவருக்கு இலக்கிய பாரம்பரியம் என் பதே அடியோடு கிடையாது எனக் கூறிவிட முடியாது. அவரது தந்தை குர்ரம் வீரய்யா கொல்ல கத்தலு என்ற ஒருவகை நாடோடி இசைப்பாடலில் தேர்ச்சியும் திறமை பும் மிககவராக விளங்கினார். எப்படியோ தட்டுத்தடுமாறி எட்டாம் வகுப்பு லரை எட்டிப் பார்த்த திரு ஜோஷ்வா அதற்கு மேல் கல்வித் துறையில் முேைனறிச் செல்ல வசதிகளோ வாய்ப்புகளோ இல்லாத நிலையில் ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆரம்ப பள்ளியொன்றில் ஆசிரியரானார். இக்காலக் கட்டத்திலே யே அவர் கவனம் இலக்கியததின்பால் சென்று விட்டது. இயற்கையிலேயே கலித்துவ உணர்வால் பொங்கி நினற அவர் உள்ளம் கவிதைச் செல்வங்களை ஈன்றெடுக்கத் தொடங்கியது. திரைப்பட அரங்கில் பேசா படங்களுக்கு இடையிடையே கதையை மொழிபெயர்த்துக் கூறும் பணி யை மேற்கொண்டபோதும் பின்னர் மீணடும் ஆசிரியர் பணியை மேற்கொண்டபோதும் நாடக அரங்குகளுக்குக் கதை வசனம் எழுதி வந்தபோதும் அவர் கவிதைகள் எழுதுவதை நிறுத்தாது தொடர்நது செய்து வந்தார். ஆசிரியர் பணியை ஆற்றிக் கொண்டே தனியாகப் படிதது ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் தெலுங்கு மொழி பண்டிதர் தேர்வில் வெறுை ‘உபய பாஷா ப்ரவீணா" எனும் கீழ்க்கலைப் பட்டத்தைப் பெற்று தெலுங்கு மொழி ஆசிரியரானார். இதன் பின்னர் இவர் முழுக்கவன மும் இலக்கியத்தின்பால் திரும்பிவிட்டதெனலாம், இதனி டையே பல்வேறு இதழ்களில வெளிவந்த இவரது கவிதை கள் மக்கள் உள்ளத்தில் சிறப்பிடம் பெறத தொடங்கின, புகழ்த் தென்றல் இவர் பால் திரும்பத் தொடங்கியது.