பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 இவர் இலக்கியப் படைப்புக்களின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்று கொண்டிருந்த காலகட்டத்தின் இடை யிடையே போர்ப் பிரச்சாரப் பணியிலும் இறுதியாக அனைத்திந்திய வானொலியில் தெலுங்கு பேச்சு நிகழ்ச்சி களின் தயாரிப்பாளராகவும் சில காலம் பணியாற்றினார். இவரது கவிதைப் படைப்புகளின் பெருவெற்றிக்கு அடிப்படைக் காரணம் அவற்றில் காணும் எளிமையும் தெளிவுமாகும். எத்தகைய ஆழ்ந்த சிநதனைக் கருத்துக் களையும் அனாயசமாக மக்கள் உள்ளத்தில் படியுமாறு கூறத்தக்கவண்ணம் மொழியை லாவகமாக கையாள் வதில இவருக்குள்ள ஆற்றல் அளப்பரியதாகும் தங்கு தடையினறி நீரொழுக்கும்போல் செல்லும் இவரது இயற் கையான கவிதை நடை, பாமர மக்களையும் தன் பால் சர்க்கும் தன்மையுடையதாகும் மிக உயர்ந்த படிப்பறிவு பெற்றவர்கள் மட்டுமல்லாது சமுதாயத்தின் கீழ்த்தட்டில் வாழும் சாதாரண பாமரர்களும் இவரது கவிதைகளைப் படித்து ரசித்து போற்றும் இவரது அன்பிற்குரிய வாசகர் களாக மாறியதற்கும் இதுவே காரணமாகும். எளிமையோடு கருத்துவளம் மிக்கவை இவரது கவி தைகள் சிறு கவிதையானாலும் நீண்ட கவிதையானாலும் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்கள் ஏதாவது ஒரு உருவில் இல்லாமலிருக்காது. நாட்டுப் பற்று, சமுதாய சீர்கேட் டிற்கு அடிப்படைக் காரணங்களாகிய சாதி வேற்றுமை கள். அவற்றால் சங்கிலித் தொடர்போல் விளைந்துள்ள ஏற்றத் தாழ்வுகள், இன்னல்கள், நிலையான வாழ்வுப் பிரச்சினைகளான காதல், துன்பம் ஆகியவைகளை கருப்பொருளாகக் கொண்டு தம் கவிதைகளைப் படைத் தளித்துள்ளார். இவர். மனித வாழ்வின் இறுதி நிலையான இறப்பைப் பற்றி இவர் பாடியுள்ள ஸ்மலான வாடி (சுடுகாடு) என்ற