பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் பிங்களி லட்சுமிகாந்தம் தெலுங்கு இலக்கிய உலகுக்கு ஐம்பதாண்டுகளுக்கு மேல் இடையறா பெரும்பணியாற்றி வந்துள்ள டாக்டர், பிங்களி லட்சுமிகாந்தம் முதுபெரும் தெலுங்குக் கவிஞரா வார் எண்பதாவது வயதில் மறைந்த இவர் இளமையில் மறைந்த காட்டுரி வேங்கடேஸ்வர ராவோடு சேர்ந்து பாடிய 'ஸெளந்தர நந்தம் கவிதைக் காவியம் தெலுங்கு இலக்கிய உலகில் புதுப் பாதை வகுத்த கவிதைப் படைப் பாகும் புதியது புனையும் ஆர்வத்திற்கும் ஆற்றலுக்கும் இளமையிலேயே கட்டியங் கூறிய இப்படைப்பு இலக்கிய வாணர்களிடையே அந்நாளிலேயே இவருக்கு மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தந்தது. புத்திலக்கியச் சிந்தனையில் மட்டுமல்லாது இலக்கியத் திறனாய்விலும் சொல்லாற்ற லிலும் நடிப்பிலும்கூட இவர் மிகு புகழ்பெற்றவராவார். கிருஷ்ணா மாவட்டம சல்லபள்ள கோட்டத்திலுள்ள அர்தாமூர் கிராமத்தில் 1895இல் பிறந்த இவர் அக்காலத் தில் புகழ்பெற்ற புலமைச் செல்வராகத் திகழ்ந்தவரும் பிரிக்கப்படாத சென்னை மாதில ஆஸ்தானக் கவிஞரு மான திரு சல்லப்பிள்ளை வேங்கட சாஸ்திரி அவர்களைத் தன் ஆசிரியராக அடைந்து இளமையிலேயே பெரும் புலமையைப் பெற்றார். ஆசிரியரிடம் மூன்றாண்டுகள் முனைந்து கற்று தெலுங்கு மொழியிலும் சமஸ்கிருதத் திலும் போதிய புலமை பெற்ற பின்னர் மசூலிப்பட்ட ணத்தில் உள்ள நோபிள் கல்லூரியில் பி.ஏ பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்ட மும் பெற் நார் சென்னையில் படிக்கும்போது தன படிப்புச் செலவை ஈடு செய்ய இவர் அவ்வப்போது தெலுங்கு நாடகங்களில் நடிக்க வேண்டியதாயிற்று. 11