பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 யின கவிதைகளுக்கு மிகுதியும் உண்டு எனபது தெளிவான Ꮽa.☾Ꮳy Ly . குவெம்பு படை தத 'ராமாயண தரிசனம்' என்னும் காவியம் 23,000 வரிகளைக் கொண்டது. இக்கால வாழ்க் கைப் போக்கில் இக்காவியத்தை கூறிச் செல்லும பாங்கு இவரது படைப்பாற்றலுக்கு எனறென்றும் பெருமை சேர்ப்பதாக உள்ளது. டி.வி.ஜி. என சுருக்கமாக கன்னட இலக்கிய ஆர்வலர் களால் அழைககப்படும டி.வி. குண்ட ப்டா புத்திலக்கிய வளர்ச்சிக்குப் பெரும பணியாற்றிய கவிச் செல்வராவார். இவரது கவிதைகளில் இயற்கை எழிலோடு மனித வாழ் வின் இயல்புகளும மனிதததுவ மேனமையும் அழகுறச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. இவரது படைப்புகளுள் மிகச் சிறந்த ஒன்றாகத் திறனாய்வாளர்களால் கருதப்படுவது 'மங்கு திம்மன கக்க' எனும் காவியமாகும். இப்படைப்பில் அனறாட மனித வாழ்வில் இழையோடி நிறகும் வாழ் வியல் தத்துவக் கண்ணோட்டத்தைக் காணலாம். காவி யப் போக்கில மனிதர்களைச் சூழ்ந்துள்ள பிரச்சினை களை நேரடியாகவும மறைமுகமாகவும் திறம்பட வெளிப் படுத்துகிறார். சுமார் ஆயிரம் பாடல்களைக் கொண்ட இக்காவியம் கனனட மொழிக்கு அவரளித்த அற்புதக் காணிககை என்பதில் ஐயமில்லை. 'மங்கு திம்ம" எனத் தன்னை அழைத்துக் கொள்ளும் கிராமியச் சூழலில் வாழும் குரு ஒருவர் எழுதிய நூலாக "மங்கு திம்மனகக்க'வை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். இதில் பாததிரப் படைப்புகள் அதிகமிலலை, கலையம் ச மும் குறைவே. ஆனால் கீழை நாடுகளின், மேலை நாடு களின் அறிவுச் செல்வங்கள் அனைததையும் திரட்டித் தரும் ஞானக் களஞ்சியம் போன்று இஃது விளங்குகிறது. காவியச சாயலும கட்டுக்கோப்பும் கொண்டு விளங்கும்