பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவசங்கர சுவாமி தெலுங்கு இலக்கியத்துறை புத்துலகப் போக்கிற் கேறப புதிய புதிய வடிவங்களில் அழுந்தக் காலூன்றி வலுவோடும் பொலிவோடும் வளரத் தொடங்கிய காலத் தில அவ்வளர்ச்சிக்கு வேகமும் விறுவிறுப்பும் ஊட்டிய வர்களுள் குறிப்பிடத்தக்கவர் சிவசங்கர சுவாமி' என இன்று அழைக்கப்படும் நவ்ய சாஹித்ய ஆச்சார்யா" தல்லா வஜ்ஜல சிவசங்கர சாஸ்திரி ஆவார். மேனாட்டுப் புத்திலக்கியப் போக்கு எவ்வளவு வலு வாகத் தாக்கியபோதிலும் அதற்கு இம்மியும் அசைந்து கொடுக்காத போக்கில் அன்றைய புகழ்பெற்ற எழுத் தாளர்கள் பலரும் பழைய மரபுப் போக்கினையே உடும்பு பிடியாகப் பிடிததுக் கொண்டிருந்த காலகட்டத்தில் புத் துலக மரபுகளை அடியொற்றிய புதிய புதிய படைப்புக் களை உருவாக்க இளைய தலைமுறையினைத் தூண்டி வளர்க்கும் அருஞ்சக்தியாக விளங்கியவர் சிவசங்கர சுவாமி ஆவார். புத்திலக்கியப் போக்கினை விரைந்து வளர்க்க மராட்டியத்தில் தோற்றுவிக்கப்பட்ட ரவிகிரண மண்டல்' கர்நாடகத்தில் எழுந்த கெளயர கும்பு'போல் தெலுங்கு இலக்கிய உலகில் அடுத்தடுத்து இரண்டு இலக்கிய அமைப்புக்களை உருவாக்கினார் இவர் சாஹித்தியசமிதி' "நல்ய சாஹித்ய பரிஷத்' என்ற இவ்விரு அமைப்புகளும் அக்காலத் தெலுங்கு இளம் எழுத்தாளர்களிடையே இலக் கியப் புத்தார்வப் பெருக்கைப் பொங்கியெழச் செய்தன வாகும். இளைய தலைமுறையினரிடையே உருவான இவ் வார்வத்தைத் தொடர்ந்து பல இலக்கிய இதழ்களையும் ஆரம்பித்து நடத்தினார். மேற்கூறிய அமைப்புகள் மூலம்