பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 என்ற சிறு கவிதை நம் இலக்கியத்தின் கண் காணும் அகத் திணைப் பாடல்களைப் போனறே எளிமையும் பொரு ளாழமும் கொண்டு திகழ்கின்றது. இன்பியல் போன்றே துன்பியல் காவியங்களை இயற்றுவதிலும் கைவரப் பெற்ற கவிஞராகத் திகழ்கிறார் ராயப்ரோலு. இதற்கு ஏற்ற எடுத்துக்காட்டுகளாக "ஸ்நேகலதா தேவி 'கஷ்ட கமலா' என்ற இரு துன்பியல் காவியங்களைக் கூறலாம வரதட்சணைக் கொடுமையால் ஏழைப் பெற்றோர் படும் துயரத்தைத் தாளாது தற்கொலை செய் கொளளும் இளம்பெண் "ஸ்நேகலதா தேவி'யின சோகக் கதை ராயப் ரோலு சாந்திநிகேதனில் இருந்தபோது வங்கத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சியொன்றை அடித்தளமாகக் கொண்டு பின்னப்பட்ட உண்மைக் கதையாகும். இவரது கவிதைகளின் குறிப்பிடத்தக்க மற்றோர் சிறப்பம்சம் நாட்டுப் பற்றினை ஊட்டி வளர்ப்பதாகும். அந்த வகையில் இவர் தெலுங்கு நாட்டின் தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியாராகவே மதிக்கப்படுகிறார். ஆந்திர நாட்டின் அருஞ் சிறப்புக்களையும் பாரத நாட் டின் பழம் பெருமைகளையும பறைசாற்றும் அவரது கவிதைகளின் வீறுநடை பல்லாயிரக்கணக்கான இளைஞர் களை தட்டியெழுப்பித் தலைநிமிரச் செய்து விடுதலைப் போராட்டத்தில் பேரார்வப் பெருக்கோடு ஈடுபடத் தூண்டின என்பதில் ஐயமில்லை. தாகூரின் மயக்கும் கவிதைகளின்பால் மனதைப் பறி கொடுத்த ராயப்ரோலு ஒரு சில ஆண்டுகள் சாந்தி நிகே தனத்தில் தங்கிய பின்னர் எழுதிய ஜட குச்சுலு (ஜடை குச்சுகன்) எனற காவியத் தொகுப்பு நூல் தாகூரின் எழுத்துச் சாயலிலேயே அமைந்துள்ளது. ஆந்திராவளி’ 'தெலுங்குதோட' (தெலுங்குப் பூங்கா) போன்ற கவிதைத் தொகுப்புகள் ஆந்திர மண்ணின அருமை பெருமைகளை