பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 யும் தெலுங்கு மொழியின் சிறப்புக்களையும் தெளிவாக விளக்குவனவாகும் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் உள்மானியாப் பல் கலைக் கழகத்தில் தெலுங்கு மொழிப் பேராசிரியாகப் பணியாற்றிய ராயப்ரோலு ஒய்வு பெற்ற பின்னரும் வெங்கடேஸ்வராப் பலகலைக் கழகத்தில் தம் பணியைத் தொடர்ந்தார். தெலுங்கு இலக்கிய உலகில் பெரும் மாற்றங்கள் பல வற்றிற்கு வழிவகுத்த ராயப்ரோலு பழம்பெரும் இலக் கியங்களிலும் இலக்கிய மரபுகளிலும் நிறை புலமை பெற்றவராவார் செக்குமாட் டு உணர்வில் சென்ற புலவர்களிடையே புதிய பாதை வகுக்க முனைந்த இவர் விரைவில் புதியதோர் கதைப் பாடல் இலக்கணத்தையே வகுத்து விட்டார். ரம்யா லோகம்’ ‘மாதுரி தரிசனம்" ஆகிய இரண்டு நூல்களும் அவருடைய புதிய கொள்கை களை விரிவாக விளக்கும் செய்யுளியல் நூல்களாகும். இந்தப் புதிய கொள்கைகளின் அடிப்படையில் இவர் இயற்றிய கவிதைகளின் தொகுப்பு வனமாலிய" என்ப தாகும் சிந்தனையைத் தூண்டவல்ல இவரது ருபநவ நீதம்' என்ற நாடகம் பல்லாற்றானும் தனித் தன்மை கொண்டதாகும். இவர் படைப்பாசிரியர் மட்டுமன்று தலைசிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார் மிகச் சிறந்த முறையில் பவபூதியின் உத்தர ராம சரிதை'யையும் மாகவி காளி தாசரின் மேகதூது’வையும் உமர் கையாமின் 'ருபயாத்' தையும் தாகூரின் ஊர்வசி'யையும் அழகுற மொழி பெயர்ததளித்துள்ளார். தனக்கென தனி வழி வகுத்து உணர்ச்சிக் கவிதை இதில்? உருவாக்கிய ராயப்ரோலு முற்போக்கு தெலுங்கு எழுத்தாளர்களின் அமைப்பான 'தவ்ய