பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனந்தகிருஷ்ண சர்மா இன்றைய தெலுங்கு இலக்கியத் திறனாய்வுத் துறை வளர்ச்சிக்குக் கடந்த கால் நூற்றாண்டுகாலமாக அமைதி யாக, ஆனால் அழுத்தமாக தொண்டாற்றியவர் திரு. ராள்ளபல்லி அனந்தகிருஷ்ண சர்மா அவர்களாவார். மிகச் சிறந்த இலக்கியப் பெரும் புலவராக மதிக்கப்படும் திரு. சர்மா அவர்கள் பழைய தெலுங்கு மரபுவழி தம் இலக்கிய வாழ்வை நிரல்பட நடத்தி வந்துள்ளவர். மிகச் சிறந்த இசைப் புலவராகவும் இசைப் பாடலாசிரியராக விளங்கும் இவர் கற்பனை வளமிக்கக் கவிஞருமாவர். . தெலுங்கு இலக்கிய உலகில் எந்த அளவுக்கு மக்களால் மதித்துப் போற்றப்படுகின்றாரோ அந்த அளவுக்குக் கன்னட மக்களிடையேயும் பெரும்புகழ் பெற்றவராகவும் திகழ்கின்றார். அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள ராள்ள பல்லி எனும கிராமததில் 1893ஆம் ஆண்டில் பிறந்த திரு. சர்மா தொடக்க சமஸ்கிருதக் கல்வியைத் தம் தந்தையிடம பெற்றார். பின் தொடர்ந்து தன கல்வியை மைசூர் கிருஷ்ண ப்ரம்ம தந்தர பரகால யதீந்திர சுவாமி அவர் களிடம் பெற்றார் இக்காலத்திலேயே சம்ஸ்கிருத மொழி யில் பாடல்கள் இயற்றும் முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார். இளம் வயதிலேயே வியக்கத்தக்க அளவுக்கு நினை வாற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார். ஒருமுறை கேட்ட வற்றை அடி பிறழாமல் அப்படியே திரும்ப ஒப்புவிக்கும் பேராற்றல் இவரிடம் இயல்பாகவே படிந்திருந்தது. இஃது விரைவாக நிறை புலமையடைய பெருந்துணை புரிந்ததெனலாம். பத்து வயது நிறைவுறுவதற்கு முன்