பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 னரே இவர் மீராபாய், தாராபாய் ஆகிய இருவரையும் பற்றி இரு காவியங்களை தெலுங்கில் இயற்றி விட்டார் எனறால் அவர் இளமையில் பெற்றிருந்த பெரும் புலமை யைப் புரிந்து கொள்ளலாம். மைசூர் அரசர் கல்லூரிப் பேராசிரியரான திரு சி. இராமலிங்கா ரெட்டி அவர்களின் நட்பு இவரது வாழ் வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அவரது துணை யின் விளைவாக இருபது வயது நிரம்புவதற்கு முனனரே அரசர் கல்லூரியில் தெலுங்கு மொழிப் புலவராகப் பணி யாற்றத் தொடங்கினார். இதிலிருந்துதான் இவரது முறையான இலக்கியப் பணி தொடங்கியது. அதற்குப் பெருந்துணையாகவும் தூண்டுகோலாகவும் இருந்தவர் திரு. சி. இராமலிங்கா ரெட்டி அவர்களே ஆவார் அக் காலத்தில் புகழ் பெற்ற புதுமை வேட்கையாளராகவும், தெலுங்கு இலக்கியத்தில் நிறை புலமை பெற்றவராகவும், தலைசிறநத கல்வித துறையாளராகவும் மட்டுமின்றி, இவர் போற்றத்தக்க திறனாய்வாளராகவும் விளங்கி னார். தெலுங்கு இலக்கிய உலகின அழுததமான இலக்கிய வளர் சசிக்கு உயரிய உரைகல்லாக மட்டுமின்றி அச்சாணி யாகவும் எதிர்காலததில் அமையத்தக்கது திறனாய்வுத் துறை என்பதில் மிக அழுத்தமான தம்பிக்கை கொண்டி ருந்தார். அதன விளைவாகத் தன் தோழர்களின் சிந்தனை யும் அக்கரையும் எப்போதும் திறனாய்வுத் துறையின் பால் திருப்ப இவர் தவறியதேயில்லை. அவ்வுணர்ச்சிகள் திரு. சர்மா அவர்களிடமும நாளடைவில் செல்வாக்கு பெற்றதில் வியப்பேதும் இல்லை. இப்போக்கின் விளைவாக திரு. சர்மா எதையும் ஆய்வுக் கண்ணோட்டத்துடனேயே கண்டு மற்றவர்க்கு உணர்த்த லானார். வேமனாவைப்பற்றிய இவரது நீண்ட ஆய்வுரை அக்காலத்தில் புகழ் பெற்ற ஒன்றாக அமைந்தது. கடந்த கால இலக்கியப் படைப்புக்களை ஆய்வதோடு தறகால