பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.3 முறையே டிப்படியாக உயர்ந்தனவாக நான் கருது கிறேன். எழுத்துப் படைப்பாளி எத்தகையவனாக இருக்க வேண்டும் என் பதை விளக்கும்போது இலக்கியம் எழுத்தாளனின் வாழ்க்கையுடன நெருங்கிப் பிணைந் துள்ளது தன் னுடைய குறைகளை உணர்ந்து அவற்றைத் திருத்திக் கொள்ள உணமையில் முயற்சி க்காதவன் பிறருக்கு எதை எடுத்துச் சொல்லும உரிமையற்றவனா வான் என்பதைச் சற்று அழுததமாகவே கூறுகிறார் அவர் கல்லூரியில் ஆசிரியப் பணியாற்றிய போதிலும் கல்லூரிப் படடங்கள் ஏதும் பெற்றவரில்லை. ஆயினும் தற்கால இலக்கியப் போக்குகளைத் துல்லியமாக மதிப் பிட்டறியும் கூர்த்தமதி படைத்தவராக விளங்குகிறார். இளமையிலேயே சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த திரு சர்மா பல வடமொழிப் படைப்புக்களை தெலுங்கில பெயர்ததாா. அவற்றுள் சிறந்தவைாகக் கருதப்படுபவை ஹாலாவின் காதா சப்த சதி கவிதைகள் காளிதாசரின் ரகு வம்சம் பாசாவின ஸ்வபன வாச வதததா அணமையில வெளிவந்த வேதாந்த தேசிகரின் 'அபீதிஸ்தவா போனறவைகளாகும். இளமை முதலே இசையுணர்வு நிரம்பப் பெற்ற இவர் புகழ்பெற்ற இசை வல்லுநர் திரு பிடாரம் கிருஷ்ணப்பா விடம் இசையை முறையாகப் பயின்று தேர்ச்சி பெற்றாா. புரந்தரதாசரின் சமகால இசைப் புலவரான அண்ணமாச் சாரியாரின் நூறு பாடல்களுக்கு இசையமைத்தார். அவை இன்று இசை மேடைகளில் முழங்கி வருகின்றன. இவர் இயற்றிய பெனுகொண்ட கொண்ட” (பெனுகொண்டா மலை) என்ற அரிய பாடல் தெலுங்குக் கவிதைகளில தலைசிறந்த கதைப் பாடல் நூலாக விளங்குகிறது.