பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி கிருஷ்ணாச்சாரியா இக்காலத் தெலுங்கு எழுத்தாளர்களுள் மரபொழுங்கு வழுவா பண்டித-கவிகள் ஒரு சிலரேயுண்டு. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திரு காசி கிருஷ்ணாச்சாரியா அவர் கள் ஆந்திர மாநில அரசவைக் கவிஞர்' என்ற சிறப்புக் குரிய இவர் தெலுங்கு இலக்கிய உலகில் ஒரு சிறந்த யோகியராகப் போற்றப்படுகிறார், பழங்கால முனிவர்களிடத்தே காணப்பட்ட அத்தனை சிறப்பம்சங்களும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் வழி வந்த முனியுங்கல ராக-கவிச் செல்வராக கற்றோரால் மதிக்கப்படும் இவர் இக்கால யோசியாராகப் போற்றப்படுவதில் வியப்பேதும் இல்லை. இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள மசூலிப்பட்டணத் தில் 1872ஆம ஆண்டில பிறந்தார் பழைய பாரம்பரியப் படி இவர் இளமையிலேயே தெலுங்கிலும் தமிழிலும் வட மொழியிலும் நல்ல தேர்ச்சி பெற்றார் இதன் விளைவாக இவர் பத்து வயதிலேயே கவிதைகளை இயற்றத் தொடங்கி விட்டார் சிறு வயது முதலே துணமான் நுழைபுலம் மிக்க வராகத் திகழ்ந்த கிருஷ்ணாச்சாரியா ஒரே சமயத்தில் பல செயல்களைச் செய்யும் ஆற்றல் உள்ளவராக இருந்தார். இவ்வாறு ஒரே சமயத்தில பல செயல்களைச் செய்வதை அவதானம்' எனக் கூறுவர். ஒரே சமயத்தில் எட்டுக் காரியங்கள் செய்பவரை "அஷ்டாவதானி' என்றும் நூறு காரியங்களைச் செய்யும் ஆற்றல் பெற்றவர்களை 'சதாவ தானி என்றும் கூறுவர். அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த மகாமதி செய்குத்தம்பிப் பாவலர் அவர்கள்