பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 தெலுங்கு பெண் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க வராக இன்று விளங்குபவர் முப்பாள ரங்கநாயகியம்ம ஆவார். பதினைந்தாவது வயதிலேயே இலக்கியப்பணியை மேற்கொண்ட இவர், பகுத்தறிவுச் சிந்தனையின் அடிப் படையில் தன் எழுது கோலை இலக்கியப் பணிக்கென மிகத் திறமையுடன் கையாண்டு வருகிறார். பெண்களின் உள் மன உணர்வுகளை உளவியல் அடிப் படையில அற்புதமாகச் சித்தரிக்கும் கலையில கைதேர்ந்த வராக விளங்கும் முப்பாள ரங்கநாயகியம்ம, குடும்பச் சூழலில் ஏறபடும் மேடு பளளங்களுக்கிடையே கணவனும் மனைவியும எதிர்கொள்ளும் எத்தனையோ பிரச்சினை களை உள்ளங்கை நெல்லிக்கனி எனத் தெள்ளிதின் எடுதது விளக்குகிறார். பழமை பாசி படர்ந்த குடும்பத்தில் புதுமை உண்ர் வும் சுதந்திரச் சிநதனையும உள்ள பெனகள் படும் தொல்லைகளை-போராட்டங்களை அற்புதமாகச் சித் தரிக்கும்வண்ணம் பாத்திரங்களைப் படைத்துத் தன் நாவல்களில் உலவ விடுகிறார். பழமைப் போக்குகளை விமர்சிப்பதிலும்கூட தனக்கென ஒரு தனி பாணியை வகுத்து தன் பேனாவை ஒட வைத்துக் கொணடிருப்பவர் முப்பாள ரங்கநாயகியம்ம என்று சொன்னால்கூட மிகையாகாது. சுருங்கச் சொன்னால் இராமயணாப் பாத்திரங்களையே நேரிடையாகவும் மறை முகமாகவும் பகுத்தறிவு அடிப்படையில் விமர்சிக்கும் வகையில் தன் படைப்பிலக்கியங்களில் கதாபாத்திரங் களைப் பாங்கோடு கையாண்டு வாசகர்களை வலுவாகச் சிந்திக்கத் தூண்டிவரும் மறுமலர்ச்சி எழுத்தாளரே ரங்க