பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 நாயகியம்ம சமூகக் கோணல் நிலைகளை, சமூகத்தில் புரையோடிக்கிடககுய பததாமபசலிததனமான பழமைப் போக்குகளை, அறியாமைச் சேறறில் உழன்று கொண்டு பழமைக்கும் புதுமைக்கும் இடையே நடைபெறும் போராட்டங்களைச் சித்தரிப்பதிலும் வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டுவதிலும தனி ஆற்றல் பெற்ற எழுத் தாளராக விளங்கி வருகிறார். பெண்ணுலகப் பிரச்சினைகளைத் தன் கழுகுக் கண் கள்ால் கணடுணர்ந்து, அவற்றைத் தன் எழுதுகோலால் விண்டுரைக்கும் இவரது எழுத்துக்களுக்கு ஏராளமான பெண் வாசகாகளும் பெண்ணுலகின் பிறபோக்கிலே கழிவிரக்கம் கொணட ஆண வாசகர்களும் நிறைய உள்ளனர். இவரது படைப்புக்களில் பல தெலுங்கு மொழி இலக்கிய இதழ்களில் தொடராக வந்து பின்னர் நூலுருப் பெற்றவைகளே அதிகம. சமூக வாழ்வின் அந்தரங்கங்களை-கு றி ப் பாக பெண்களின் உள்மன உணர்வுகளைத துல்லியமாகத எழுதத் தெரிந்தவர்கள் பெண்களே என்றாலும், அதனை இதமான முறையில் இனிய சொல்லாட்சியோடு படிப்போர் உள்ளத்தில் பசுமரத்தாணிபோல் பதியச் செய்வதில் முப்பாள ரங்கநாயகியம்மாவுக்குக் கிடைத்த வெற்றி மற்ற பெண் எழுத்தாளர்களுக்கு இதுவரை கிடைத்துள்ளதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. இவரது முதல் படைப்பு கிருஷ்ணவேணி என்ற புதினமாகும் இதில் கன்னிப் பருவத்தில் காதலித்த கதா நாயகி சந்தர்ப்ப சூழ்நிலையால் மற்றொருவனை மணக்க நேர்கினறது அவளது இளமைக்கால காதல் விவகாரங்கள்