பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 கணவனுக்குத் தெரியவே இருவரும் பிரிய நேர்கின்றது கதையின இறுதியில் மீண்டும இருவரும் ஒன்றுகூடி வாழ் வதாக அமைததுள்ளார். ஆனால் அவரது ரசிகர்கள் அவ் வின்பவியல் முடிவை விரும்பாததால் கணவனைக் கொடு மைக்காரனாக அமைதது இறுதி முடிவை துன்பியலாக மாற்றி அமைத்து விட்டார். அவரது படைப்புக்களில் மிகச் சிறந்த ஒன்றாகத் திறனாய்வாளர்களால் மதிக்கப்படுவது பலி பீடம்" என்ற புதினமாகும் 1965ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச சாகித்திய அக்காதெமியின் பரிசு பெறற இப்புதினம் கலப்பு மணப் பிரச்சினையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். இலட்சிய உணர்வுகட்கும் பிரத்தியட்ச நடைமுறை களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை அருமை யாகச் சித்தரிப்பது இப்புதினம. இதன்பின் வெளிவந்த படைப்பு "ரசயித்ரி (பெண் எழுந்தாளி) எனும் கலைத் திறன்மிக்க புதினமாகும் புகழ் பெற்ற எழுத்தாளி ஒருத்தி தன குடும்பச் சூழலில் சந்திக் கும் பல்வேறு கசப்பான உண்மைகளை பிரததியட்ச அடிப் படையில் சித்தரிப்பது இப்புதினம் எழுததால் புகழ்பெற்ற ஒரு பெண் எழுத்தாளி பல்வேறு ஆண்களைச் சந்தித்து அளவளாவ நேரிடுவதும் அதனால் கணவன மனக் கசப் படைவதும் அது அவர்கள் மகிழ்ச்சிகரமான மண வாழ் வுக்குப் பேரிடியாக அமைவதும் சிறப்பாகச் சித்தரிக்கப் படுகிறது இப்புதினம் வாயிலாக இவ்வெழுத்தாளியின் உண்மை மன உணர்வுகளை நம்மால் ஒரளவு நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது பெண்ணிற்குள்ள சுதந்தர உணர்வு அவளுக்குள்ள சமூகப் பொறுப்பு எழுத்தில்