பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. ஆர். சர்மா தமிழ் இலக்கியக் கூட்டம். ஏராளமான தமிழ் இலக் கிய ரசிகர்கள் குழுமியுள்ளனர். ஒளியுமிழ் கண்களும் சிந்தனை தேங்கிய பரந்த நெறறியும் அமைதி தவழும் முகமும கொண்ட தடுத்தர வயதுடைய சொற்பொழி வாளர் மடை திறந்தாற் போனறு தங்கு தடையின்றி அழகு தமிழிலே அருமையாக சொல் மாரி பொழிந்து கொணடிருக்கிறார். பேச்சினிடையே ரங்கநாதா ராமா யணத் தெலுங்குப் பாடல்களும் கம்ப ராமாயணத் தமிழ் பாடலகளும் சராமாரியாக மாறி மாறி ஒலிககின்றன இனிய இசையோடு உணர்ச்சி பாவம் ததும்ப கணிரெனப் பாடல்களை இசைக்குமபோது ரசிகாகள் அககவிதை களோடு உளளம தோய ஒனறிவிடுவதை ரசிகர்களின முகத்திலே அலைபாயும மகிழ்ச்சிப் பெருக்கிலிருநது நம் மால் உணர முடிகிறது. தெலுங்குப் பாடலகளின பொருள் கள முழுமையாகப் புரியாவிட்டாலும் பாடலகளை இசைக்கும முறையினால் கவிஞனின் உள்ளுணாச்சி எத தகையது என்பதை ஒரளவு புரிநது ரசிக்க முடிகிறது தெலுங்கு மொழியை களி தெலுங்கு' எனத் தமிழக் கவி ஞன் பாராட்டியது எத்துணை பொருத்தமென எண்ணி மகிழ்நது கொணடிருக்கும்போது 'கவிதையை வாய் விட்டு படிப்பதென்றால் இப்படித்தான் படிக்க வேண்டும’ என தன்னை மறந்த நிலையில வாய்விட்டுப் பாராட்டு கிறார் ரசிகர் ஒருவர். ஆமாம்! தெலுங்கிலும் தமிழிலும் இனிமைச் சுவை நனி சொட்டச் சொட்ட கணிரென முழங்கும் இவர் தமி ழறிந்த தெலுங்கரா அல்லது தெலுங்கறிந்த தமிழரா? என ஒரு கனம நமக்குத் திகைப்பேற்படுகிறது இவ்வாறு