பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 இலக்கியத்துறையில் மாற்றங்களை விளைவிக்க வேண்டும் இதுவே வளர்சசியாகும் பழைய போக்கையே மாறுத லேதுமின்றி உடும்புப் பிடியாகப் பின் பற்ற முனைவது வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக முடியும் எனபதில் அழுத்தமான நம்பிக்கை கொண்ட டாக்டர் சி.ஆர் சர்மா அவர்கள் புதியன புனைவதில் பேரார்வம் காட்டுவதோடு அத்தகு சிந்தனையுடையோரைப் போற்றிப் பாராட்டவும் தயங்குவதில்லை தெலுங்குப் புதுக் கவிதை உலகில் கருத்தோட்டத் திற்கு முக்கியத்துவம அளித்து எழுந்த எழுச்சிக் கவிதை களை "திகம்பா கவிதை' (நிர்வாணக் கவிதை) என அழைக்க முனைந்தபோது அதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த ஆரம்பப் புலமையாளர்களில் குறிப்பிடத்தக்கவ ராக விளங்கியவர் இவர். 'திறம்பட கவிதைகளை இலக்கிய மேடைகளில் முழங்கிய புதிய கோணத்தில் விளக்க உரை தநது ஆதர வளித்தனர். இதன்மூலம் இலக்கிய எழுச்சி கொண்ட இளைஞருலகு இவர் மீது பற்றுதல் கொண்டதில் வியப் பில்லை. அதுமட்டுமா? இவரது கவித்துவ உள்ளத்திலிருந்து பீரிட்டெழுந்து வெளிப்போந்த கவிதைத் துளிகள் இவரது மறுமலர்ச்சி இலக்கிய சிந்தனைக்குக் கட்டியங் கூறுவன வாகும். டாக்டர் சர்மா அவர்களின் கவிதை உலைக்களத்தில் பட்டுத் தெரித்த கவிதைப் பொறியொன்றுக்கு வேற்று மை' எனப் பெயரிட்டு அவர் பாடுகிறார். நடுத்தெருவில் நின்று வாதாடுகின்றனர் நாட்டுப்புறத்தவர்