பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 மாடி அறையில் உட்கார்ந்து கொண்டு வாதாடுகின்றனர் பட்டினத்தவர் ஏன் இந்த லேற்றுமை? நாட்டுபுறத்தின் சாக்கடை தரைமீது ஒடுகின்றது பட்டினத்தின் சாக்கடை தரையின் கீழ் ஒடுகினறது. இக்கவிதையின் எளிமையும் கருத்துச் செறிவும் நம் சிந்தை யைக் கவர்கின்றன. இவரது மொழியியற் புலமைக்குச் சான்று மதராஸ்" தெலுகு' என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலாகும். பதி னான்கு கட்டுரைகள் அடங்கிய இந்நூலில் சென்னை நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வாழும் தெலுங்கு மக்களின் பேச்சு வழக்குச் சொற்களையெல்லாம் திரட்டி அவற்றை நகைச்சுவை ததும்ட மொழியியல் அடிப்படை யில் விவரிக்கிறார் விடுதலைக்குப் பின்னர் இலக்கியத் துறையில் விளைத்துள்ள பல்வேறு மாற்றங்களை அழகுற விளக்கிப் படிப்போரைச் சித்திக்கத் தூண்டுகிறார். இவர் வரலாற்றுக் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள் ளார். இனிய நடையில் அமைந்துள்ள இக்கட்டுரைகள் "வியாஸ் மஞ்சூஷ' எனும் தலைப்பில் நூல் வடிவமாக வெளிவந்துள்ளது. இக்கட்டுரைகளுள் தெலுங்கு மொழி சம்பந்தப்பட். பழைய கையெழுத்துச் சுவடிகளையும் வரலாற்றுப் பட்டயங்களையும் அரும்பாடுபட்டுச் சேகரித்துத் தொகுத்து கொடுத்த ஆங்கிலேய அறிஞர் மெக்கன் ஜி துரை தெனனிந்திய வரலாற்றைத் தொகுப் பதற்குப் பேருதவி செய்த காவலி சகோதரர்கள் மதுரை நாய்க்க மன்னர்களின் தொண்டு ஆகியவற்றை விளக்கும் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவைகளாகும்.