பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19.1 இவரது தமிழ்ப் பணிகளுள் தலையாயதாக விளங்கு வது அமரகவி சுப்பிரமணிய பாரதியாரை உரிய முறை யில் இடையறாது கட்டுரை கவிதை திறனாய்வு ஆகிய வற்றின் வாயிலாகத் தெலுங்கு மக்களுக்கு உணர்த்தி வரு வதாகும். பாரதியாரின வாழ்க்கை வரலாற்றை விளக்கும் "சுப்பிரமணிய பாரதி' எனும் நூல் குறிப்பிடத்தக்க தாகும இதில உள்ள ஏழு அத்தியாயங்களில் பாரதியாரின வாழ்க்கை வரலாற்றோடு அவரது எழுத்தாற்றல் சிந தனைச் சிறப்ப ஆகியவைகளை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். பாரதியின் கவிதைகளோடு புகழ் பெற்ற தெலுங்கு மகாகவி குரஜாடா அப்பாராவ் அவர் களின அமரத்துவக் கவிதைப் படைப்புக்களை ஒப்பிட்டு ஆராய்ந்து பாரதியின பேராற்றலை விதந்தோதுகிறாா. இவைகளன்னியில் பாரதியாரின் கட்டுரைகள் சில வற்றையும் ஊழிக்கூதது போன்ற கவிதைகளையும் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். பாரதியாரைப் பற்றி தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு முழுமையாக விளக்கிக் கூறும் அரிய பணியைப் பதினைந்து ஆண்டு களுக்கும மேலாகத் தொடர்ந்து செய்து வருகிறார். இவரது பாரதி புகழ் பரப்பும் பணியைப் பாராட் டி 1965ஆம ஆண்டில் சென்னை பாரதி சங்கம் இவருக்குக் கேடயமளித்துச் சிறப்பித்தது இவரது ‘சுப்பிரமணிய பாரதி, எனும் தெலுங்கு நூலுக்கு 1970ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பரிசளித்துப பாராட்டியது. தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியக் கதைகளைக் கூறும் 'தமிழ் பஞ்ச காவ்ய கதலு' (தமிழ் ஐம்பெருங் காப்பியக் கதைகள்) என்ற நூலைத் தெலுங்கில் வெளி யிட்டார். திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றினை விளக்கும் தமிழ் வேதமு' (தமிழ் மறை) என்ற நூலை 1954ஆம் ஆண்டில் எழுதினார். 1887ஆம் ஆண்டிலேயே வெங்கட்ராம வித்யானந்தர் போன்றோர் திருக்குறளைத்