பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 பிரத்தியட்ச சமூகப் புதினத்தை இலக்கிய அளவுக்கு உயர்த்திய தகழியின வழியைப் பின்பற்றி இலக்கியப் படைப்புகளை உருவாக்கும் இளம் எழுத்தாளர் பரம்பரை யொன்றே இன்று இலக்கிய உலகில தோன்றிக கொண்டி ருக்கிறது என துணிந்து கூறலாம. தகழியின் தொடக்க காலப் புதினப் படைப்பான "தோட்டியுடே மகன" (தோட்டியின் மக)ை எனற படைப்பில் தோட்டிகளின் துயர வாழ்க்கையை உள்ளத் தைத் தொடும் வண்ணம் உருக்கமாகச் சிததரிக்கிறாா. 'ரெண்டிடங் கழி’ (இரண்டு படி) என்ற புதினததின் வாயிலாக நிலமில்லாத உழவனொருவன ஆலப் புழைக கருகிலுள்ள சதுப்பு நிலங்களில் படும் துயரங்களை நெஞ்சை உலுக்கும் வசையில படம் பிடித்துக் காட்டு கிறார். சிறந்த பாத்திரங்களைப் படைதது திறம்படக் கையாண்டு கதை புனையும் ஆற்றலில தகழி எவ்வாறு இமயம்போல் விளங்குகிறார் எனபதறகுக கட்டியங் கூறும் புதினமே செமமீன" (எறா-கடல் வாழ் மீன் களில் ஒரு வகை) ஆகும் ஆலப்புழையை அடுததுள்ள கடற்கரைப் பகுதிகளில் வாழும மீனவப் பெண்ணொருத் திக்கும் முஸ்லிம் இளைஞனொருவனுக்கும இடையே தோன்றி வளர்ந்த காதல் கதையைச சித்தரிக்கிறது இது . இயற்கையான வர்ணனைகளுடன காதலின் திறததை விளக்கியுரைக்கும் இப்புதினம் 1956ஆம் ஆண்டிற்கான சாகிததிய அக்காதெமிப் பரிசைப் பெற்றதோடு இநதிய மொழிகள் அனைத்திலும் உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது அண் மையில் திரைப்படமாக்கப்பட்ட இப்புதினக் கதை குடி யரசுத் தலைவரின் தங்கப் பதக்கப் பரிசையும் பெற்று வெற்றிக் கொடி நாட்டியது அனைவரும் அறிந்ததே. இவரது மற்றொரு சிறந்த படைப்பான “ஏணிப்படிகள்' எனற புதினத்திறகு 1964ஆம் ஆண்ற்ெகான கேரள சாகிததிய அக்காதெமியின பரிசு கிடைத்துள்ளது.