பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 கருத்தாழம் இயற்கையான நடை தெளிவு போன்ற சிறப்புக்கள் பலவும் ஒருசேரக் கொண்டு திகழும இவரது கதைப் படைப்புக்கள் மக்களிடையே பெருஞ் செல்வாக் கையும் புகழையும் பெற்றுள்ளன கவர்ச்சி மிக்க எளிய நடையின் மூலம் எத்தகைய கருத்துககளையும் நேரடியாகவும தெளிவாகவும் சுருக்க மாகவும் மனதில் பதியும் வணணம் லாவகமாகக் கூறுதல் இவரது நடைக்குள்ள தனிச் சிறப்பாகும். வழக்கரைஞராகப் பணியாற்றிய காலத்தில் இவரது வாழ்வில ஏற்பட்ட கவையான சம்பவங்களை எண்டே வக்கீல் pவிதம் (என்னுடைய வழக்குரைஞர் வாழ்க்கை) என்ற தனது வாழ்ககை வரலாற்று நூலின் மூலமாகச் சுவைபட எடுத்துக் கூறுகிறார் தகழி. அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, மலேசியா, ஜப்பான். தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் சென்று திரும்பிய தகழி தமது பயன அனுபவங்களைக் கூறும் பயண நூல் ஒன்றையும் எழுதி யுள்ளார். கவர்ச்சியறற தோற்றமுடைய இவர் எளிமையின் உருவமாக வாழ்ந்து வருகிறார். ஓயாது படிக்கும் பழக்க முடைய இவர் தனது படைப்புகளை எழுதத் தொடங்கி விட்டால் ஒரு சில நாட்களுக்குள்ளாகவே தொடர்ந்து எழுதி முடித்து விடுகிறார். எழுதுவதற்கு அமைதியான சூழ்நிலையை விரும்பும் இவர் எப்போதும் அதிகாலை நேரங்களையே எழுதத் தகுந்த நேரமாகக் கொண்டுள் ளார். சொல்லேருழவரான தகழி தமது வேளாளர் குல மரபுக் கேற்ப வேளாண்மைத் தொழிலில் மிக அதிகமான