பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 எழுத்துப் படைப்பு 'மஹிளா மந்திரம்' என்ற இதழில் வெளிவந்த நளினியும் லீலாவும்' என்ற கதையே இவரது முதல் சிறுகதைப் படைப்பு. இளமை முதலே தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் சமூகப் பிளவு களையும் கண்டு ஆவேச உணர்ச்சி கொண்டிருந்த அவரை ஆக்கச் சிந்தனை வழியில் திருப்ப விவேகானந் தரின் "என் குரு' எனற நூலும் சுவாமி பிரம்மரதாவின் சொற்பொழிவும் பெருந்துணை புரிந்தன பதினெட்டாம் வயதில் அவர் பண்டிட் ரிஷிராம் என்பவரின் முன்னிலை யில் 'ஆர்ய சமாஜ'த்தில் சேர்த்தார். அப்போதுதான் 'கேசவ பிள்ளை' என்ற அவரது இயற்பெயர் பண்டிட் ரிஷிராமால் கேசவ தேவ்' என மாற்றப்பட்டது அன்றி லிருந்து இப்பெயரிலேயே இவர் இலக்கிய உலகில் உலா வருகிறார். பல்வேறு துறைகளில் அனுபவ நிறைகுடமாக விளங் கும் தேவ் பஜே பாரதம் சகோதரன் ஸ்வதேசாபி பாணி' மலையாள ராஜ்யம்' போன்ற பல்வேறு பத்திரிகை களில் பணியாற்றியதோடு தொழிலாளர் இயக்கத்திலும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார் பலவேறு நாடக கம்பெனிகளிலும் பணியாற்றி நல்ல அனுபவம் பெற்றுள ளார். இவ்வாறு மக்களோடு நெருங்கிய தொடர்புடைய பல்வேறு துறைகளில் பணியாற்றியதன் மூலம் மக்களைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் ஒரு தெளிவான கண ணோட்டமுடையவராகத் தம் இலக்கியங்களை உருவாக்கி வருகிறார் சமுதாயத்தில் காணும் குறைபாடுகளே மனித முன் னேற்றத்தைத் தடுக்கும் தடைக்கற்கள் என அழுத்தமாகக் கருதும் கேசவ தேவ் சமுதாயததின் அடித்தளத்தில் வாழும் சாதாரண மக்களையே தம் படைப்புக்களின் கதா