பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கோபாலகிருஷ்ண அடிகாலைப் பின்பற்றி புதுமைக் கவிதைகள் படைப்பதில் வல்லவர்களாக நிஸார், ஆனந்த மூர்த்தி, சந்திர சேகர கம்பர் முதலியோரைக் குறிப்பிட லாம். இவர்கள் தொடக்க காலத்தில் அடிகாவின் செல் வாக்குககு உட்பட்டு கவிதைகள் புனைந்தாலும் நாளடை வில தங்களுக்கென தனி வழி கண்டு, கம்பீர நடை போடு பவர்களாக உள்ளனர். நேரடியாக உணர்வுகளை வெளிப் படுத்துவது, எளிய சொற்களைக் கையாண்டு படிப்பவர் களைத் தனபால் ஈர்ப்பது போன்றவைகளால் நிஸார் அஹமத் சிறந்து விளங்குகிறார். பேச்சு வழக்குச் சொற்களைத திறமபடக் கையானடு சமூகச் சீர்கேட்டிற் கெதிராக குரலெழுப்புவதில் லங்கேஷ் புகழ் பெற் றுள்ளார். புதுமைக் கவிதைத் துறையில் ஆண்களின் தொகை யளவுக்குப் பெணபாலார் இல்லை யென்றாலும் கணிச மான அளவுக்கு பெண் கவிகளும் தங்கள் பங்கைச் செலுத்தியுளளனர். அவர்களுள் குறிப்பிடததக்கவர்கள் பார்வதி தேவி ஹெக்கடே, ஜானகி பைக்காடி, ஜயதேவி, ஜனகம்ம முதலியோராவர் புதுமைக் கவிதை என்ற மணி மகுடம் சூட்டப்பட்ட போதிலும் பல கவிதைகள் உப்புச் சபயின்றி, வெறும் எழுத்தடுக்குகளாக காட்சியளிகினறன புதுமைக் கவிதை இலக்கியத் துறையில் புதியதொரு அடுக்கு அண்மைக் காலத்தில் இளம் கவிஞர்களால் தொடங்கப்பட்டு வளர்த்து வரப்படுகிறது அதுவே கனனட புதுக் கவிதைத் துறையாகும். மரபைப் பற்றியோ இலக்கண விதி முறைகளைப் பற்றியோ சிறிதும் கவலைப் படாதவர்கள் இப்புதுக் கவிதைக கவிஞர்கள் பழைய கவிஞர்களின வழித்தடத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் நடைபோடும் இவர்கள் கவிதைக்கான கருவைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள விரும்புவ தில்லை சில சமயம் கண்டதே காட்சி கொண்டதே