பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் ஜோசஃப் முண்டசேரி வளரும் இலச்கியத் துறைக்கு தரமான வளர்ச்சி வேகம் ஊட்ட வல்ல விசைக்கருவி திறனாய்வுத துறை யாகும்.அத்துறையின் வளர்ச்சியின அளவைப் பொருத்தே புத்திலக்கியத்தின தரமே கணிக்கப்படுகிறது. அம்முறை யில் இறுை இந்த புத்திலக்கிய அரங்கில மலையாளப் படைப்புக்கள் பெறறுவரும் சிறப்பு மிகு பெருமையில் பெரும் பகுதி மலையாளத திறனாய்வுத துறையையே சாரும் எனக் கூறினால் அதில் தவறிருக்க முடியாது. அந்த அளவுக்கு மலையாள இலக்கிய உலகில் திறனாய்வுத துறையை செழுமைமிக்கப் பெருந்துறையாக வளர்த்து வருகிற திறனாய்வாளர்களுள் குறிப்டததக்க ஒருவராக இன்றைய மலையாள இலக்கிய உலகில மதிதது.ப போற் றப்படுபவர் சாகிததிய குசலன்’ பேராசிரியர் ஜோசஃப் முனடசேரி அவர்கள் ஆவர். பழைய இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையுள்ளவர் களுக்கு தற்கால மனப்பாங்கு முழுமையாக இருப்பதில்லை தற்கால மனப்போககு உள்ளவர்களுக்கு பழம்பெரும் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை இருப்பதில்லை. ஆனால் விதிவிலக்காக இவ்விரு தன்மைகளும் ஒருசேரக் கொண்ட வராக மலையாள இலக்கிய உலகில் கருதப்படுபவர் பேராசிரியர் முண்டசேரி ஆவார். பழைய மரபுவழிப் புலமைக்கும் தற்கால எழுத்துப் போக்குக்குமிடையே இணையற்ற இணைப்புப் பாலமாக விளங்கும் முண்டசேரி அவர்கள் அறுபத்தெட்டு வயது நிறையப்பெற்ற அனுபவ நிறை குடமானவர் 1902ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 17ஆம் நாளன்று திருச்சூரில் பிறந்த அவர், சென்னைப் பல்கலைக் கழக எம்.ஏ. பட்ட