பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2I கோலம் என்ற முறையில் தங்கள் எழுதுகோலை ஒடவிடு கிறார்கள் தாங்கள் எண்ணும எண்ணத்திறகு கவிதை வடிவில் இலக்கிய உருவம கொடுக்க முயல்கிறார்கள், அவ்வளவுதான. கிளர்ந்தெழும் இளம் தலைமுறையைச் சார்ந்த இவர் கள் ஏதோ பெரிய அளவில் கன்னட கவிதை இலக்கியத் துறைக்கு தொண்டாற்றி விட்டார்கள் எனறு கூற முடி யாது. அதே சமயம் இப்புதுக் கவிதை படைப்பாளர்களில திறமைசாலிகள் இல்லை என்றும் கூறிவிட முடியாது. ஒரு சில புதுக் கவிஞர்களின் படைப்புகள் உயர்ந்த அளவுக்கு இலக்கிய அந்தஸ்தைப் பெறவும் தவறவில்லை. இப்புதுக் கவிதை படைப்பாளர்கள் தங்கள் கவிதைக் குக் கருப்பொருளாகப் பெரும்பாலும் பாலுணர்வையும மனச் சலிப்பையுமே தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்களின் புதுக் கவிதைகள் பருவ இதழ்களில் அவ்வப்போது வெளி வருவதுடன் புதுக் கவிதைத் தொகுப்புகளாகவும் வெளி வந்துன் களன. சில புதுக் கவிதைகள் வடிவத்திற்காகவும் கருத்து களுக்காகவும அதனை வெளிப்படுத்தும் முறைக்காகவும் இலக்கிய உலகின் பாராட்டைப் பெறுகின்றன. இம் மாதிரியான கவிதைகள் வாசகர்களின ஆதரவையும் தலை முறையினரின் ஆதரவையும் பெற்று வருகின்றன இப் புதுக் கவிதைகளின உவமைகளும் புதுமையான முறையில் அமைக்கப்படுகின்றன, புதுமை எனும் போர்வையின் கீழ் சில சமயம் புதுக் கவிதைப் படைப்பாளர்கள் வரம்பற்ற முறையில் ஆபாசக் கவிதைகளாக எழுதித் தள்ளி இலக்கியப் புலமையாளர் வெறுப்புக்கு ஆளாகிவிடுகின்றார்கள்.