பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 மூலம் கதாபாத்திரங்களின் உள்ளுணர்வுகளை மட்டு மல்லாது, அவர்களின் வாழ்க்கைச் சூழலையும் அடியிற் காணும் உருவம் போனறு அறிந்துணர முடிகின்றது. இதனால் இயலபாக புனனேறும கதைப் போக்கில் பாத் திரங்கள் அனாயாசமாக உருவாகினறன என்ற மன உணர்வை வாசகர்களிடையே ஏற்படுத்தி விடுகிறார். இஃது இவரது வெற்றிகரமான படைப்பு இரகசியங்களில் ஒன்றாகும். இவர் முஸ்லிம மக்களின் வாழ்க்கையைச் சித்தரிப் பதில் தனித்திறமை பெறறவர். முஸ்லிம் எழுத்தாளர்களே மூக்கின் மேல் விரலை வைத்து வியக்கும் வண்ணம முஸ் களின் பழக்க வழக்க பேச்சு நடைகளையும் மன உணர்வு களையும் சமயச் சார்பான சடங்கு முறைகளையும் அற் புதமாக வரைந்து காட்டுவதில் அருந்திறமை பெற்றவர் என்பதற்கு எடுத்துக்காட்டு மலபார் முஸ்லிம்களின சமூக வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் இவரது 'உம் மாச்சு' எனும் புதினம். 1956இல் கேரள சாகித்திய அக்காதெமியின் பரிசு பெற்ற இபபுதினம மாத்ரு பூமி' வார இதழில் தொடர் கதையாக வநது பின் நூல் வடிவம் பெற்றதாகும். உம் மாச்சு என்ற பெணமணியை மையமாக வைத்துப் பின ணப்பட்ட இபபுதினம் அவள் வாழ்க்கையில ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளை திறம்பட விளக்குவதாகும். இப் புதினததில் நட பாடும பாததிரததின் புறப்போக்குகளைக் காட்டிலும் அக உணர்வுகளை மனோதததுவ அடிப்படை யில் விளக்குவதிலேயே ஆசிரியர் திறமை காடடியுள்ளார். பாத்திரங்களின் சிந்தனைப் போக்குகளையும உணர்ச்சி களையும் விளக்குவது போனறே முஸ்லிம இனத்தின் பண் பாட்டுத் திறத்தையும் அற்புதமாக வரைந்து காட்டிய இவர். ஒரு முஸ்லிம் அல்லாத எழுத்தாளர் எனற உண்மை யை அறிந்தபோது வாசகர்கள் அடைந்த வியப்புக்கு