பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 அளவே இல்லை, அந்த அளவுக்கு முஸ்லிமகளின வாழ்க் கையைச சிததரிப்பதில வல்லவராக விளங்குகிறார் இவர். முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பொன னானி பகுதியைச் சார்ந்தவர் இவர் எனபது ஒரு காரணம் ஆகும். 'உம்மாச்சு புதினத்தைவிட இவருக்குப் பெரும் புகழ் தேடித் தந்த புதினம் "சுந்தரிகளும் சுந்தரன்மாரும்" என்ப தாகும், முதல் உலகப் போர் தொடங்கி இரணடாம் உலகப் போர் முடிய இருபததைந்தாண்டுகளில் கேரளா வில் நடைபெறற புரட்சிகர மாறுதல்களை எடுத்தியம்பு கிறது இப்படைப்பு. குறிப்பிட்ட இக்காலப் பகுதியில் முதல் உலகப் போரின் பின விளைவுகளும் கிலாஃபத்' கிளர்ச்சிகளும் இரணடாம் உலகப் போரின் விளைவுகளும் மலபாரை பெரிதும் உலுக்கிய நிகழ்ச்சிகளாகும். இநதச் சூழலின அடிததளத்தில் அரசியல் பொருளாதார சமூக குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்களைச் சுவை பட விளக்கும் இப்புதினத்தில் முப்பதுக்கு மேற்பட்ட பாத திரப் படைப்புகள் இருந்தபோதிலும் குழப்பமினறி அவா களை கதையோட்டத்தில் இயக்குகிறார் ஆசிரியர். இஃது ஒரு வரலாற்றுப் புதினமாக இருந்தபோதிலும் மக்களின உணர்ச்சிப் போக்குகளைச் செம்மையாக வெளிப்படுத்தத் தவறவில்லை இப்புதினத்தின் சிறப்புணர்ந்த சாகித்திய அக்காதெமி 1961ஆம் ஆண்டில் பரிசளித்துப் பாராட்டி ه التي للا இவர் சிறந்த புதினப் படைப்பாளர் என்று புகழ் பெற்று இருப்பது போன்றே சிறுகதையாசிரியராகவும் பெரிதும் மதிக்கப்படுகின்றார். இவர் கவிஞராக இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்து பினனர் சிறுகதை ஆசிரிய ராக மலர்ந்து பிறகு புதினப் படைப்பாளராக மனம் பரப்பினார் இவர் நாடகாசிரியரும் குழந்தை இலக்கியப் படைப்பாளரும் கூட ஆவார்.