பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 வற்றிற்குப் பிரிக்கப்படாத அன்றைய சென்னை அரசாங்கப் பரிசுகளும கிடைத்துள்ளன. மக்களின வாழ்க்கை நிலைகளை, ஆழ நீளங்களை அற்புதமாகப் படமபிடித்துக் காட்டவல்ல ஆற்றலை இவர் பெற்றிருப்பதற்குக் காரணம, சுதந்திரப் போராட் டத்தில் இளமையிலேயே தீவிரமாக ஈடுபட்டு அதன் காரணமாக கிராமம் கிராமமாகச் சுற்றியலைந்து, பல் வேறு வகைப்பட்ட மக்களோடு நெருக்கமாகக் கலநதுற வாடிப் பெற்ற அனுபவமே ஆகும். அரசாங்கப் பணியி லும், பின்னர் 'மங்களோதயம் இலக்கிய இதழின் ஆசிரியப் பொறுப்பிலும், பிறகு தொடர்ந்து வானொலி யிலும பணியாற்றிய இவரது படைப்புக்கள் பலவும் இலக்கிய இதழ்களில வெளிவந்து நூல்வடிவம் பெற்றவை களே யாகும். பதினைந்தாம் வயதில் கவிதை இயற்றியதோடு தொடங்கிய இவரது எழுத்துப்பணி நாற்பது ஆண்டு களாகத தொடர்ந்து நடந்து வருகிறது. இவர் தேர்ந் தெடுக்கும் கதைக கருவும், பாத்திரச் சிறப்பும், கதை சொல்லும் பாணியும் எதார்த்தப் போக்கும், உயர்தர நகைச்சுவை கொண்ட எழுத்தும் வாசகர்களின் மத்தியில் இவருக்கு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்துள்ள தோடு, இன்றைய மலையாள இலக்கிய உலகில விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சில உயர்ந்த படைப்பாசிரியர் களில இவரும் ஒருவர் என்ற புகழ்மிகு நிலையையும் உருவாக்கியுள்ளன. இவரது எழுத்துக்கள் பலவும் உரூப்’ என்ற புனை பெயரிலேயே வெளிவந்துள்ளன உரூப்' என்றால் 'அந்திப் பொழுது என்பது பொருளாகும். எனினும் உரூபின் எழுத்துக்கள் இருண்ட பகுதிகளுக்கு வெளிச்ச மூட்டுவ தாகவே அமைந்துள்ளன என்பதில் ஐயமில்லை.