பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைக்கம் முஹம்மத் பஷிர் மனித உள்ளத்தின் நுட்பமான தந்திகளை மீட்டு வதன் மூலம் எழும் இதய ஓசைகளை சொல்லோவிய மாகத் தீட்டிக் காட்டுவதிலே தன னிகாற்று விளங்கும் வைக்கம் முஹம்மத் பவீர். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும பழமைப் போக்குகளை மட்டும் தகர்த்தெறி யும் மனப்போக்குப் படைத்த எழுததுச் சிற்பியல்ல; மொழியின் இலக்கணக் கட்டுக் கோபபுகளையெல்லாம உதறித் தள்ளிவிடடு எண்ணத்தை எடுத்துச் சொல்ல உதவும் கருவி எனற அளவில் மட்டுமே மொழியைக் கையாளும் புதுமைப் போக்குடையவருமாவார். ஏனெனில் மொழிச் செம்மையில் காட்டும் அக்கரை யைவிட மிகுதியாக அவரது பேனா முனை மனித உள்ளங் களை ஆழ்ந்து நோக்கி எதிரொலிப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்திகிறது எனக் கூறினும் பொருந்தும். சிறுகதைக்குரிய கருவையே புதினமாக தீட்டிப் படைக்கும் தனித்திறமை படைத்த பஷீர் ஒருவகையில தான் படைக்கும் பாத்திரங்களின் மூலம் தன்னைப் பற்றியே சொற்பொழிவாற்றுகிறாரோ எனறு எணனத் தோன்றுகிறது அவரது பாத்திரப் படைப்புகள் பேசும் முறையும் மொழியும் அவ்வகையில்தான் அமைந்துள்ளன. அந்த அளவுக்கு அவர் வாழ்க்கையில் எத்தனை தட்டுகள உண்டோ அவை அனைத்தின் சாயலாக, அனுபவ நிறை குடமாக விளங்குகிறார் எனலாம். எனவே,அவர் தம் நூல் களின் மூலம் நேரிடையாக நம்மோடு பேசினால் அது சுவையானதாகவும் ரசிக்கும்படியாகவுமே இருக்கிறது. கேரள மாநிலத்திலுள்ள வைக்கததைச் சார்ந்த தலைபோலப் பரம்பு என்ற ஊரில் இஸ்லாமியக் குடும்ப