பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227 மொன்றில் பிறந்த பoர் தன இளமைக் கல்வியை ஐந்தாம் படிவத்தோடு நிறுத்திக கொண்டு அக்காலத்தில் புயலென வீசிக் கொணடிருநத அரசியல் போராட்டத்தில் தீவிர மாய்க் குதித்து நாடெங்கும் சுற்றினார். அப்போது வங் காளத்தில உருவான பயங்கர அரசியல் போக்கு அவரது புரட்சியுள்ளததை வேகமாக ஈர்தது தனனோடு ஐக்கியப் படுத்திக் கொண்டுவிட்டது விளைவு இருமுறை காராக் கிரகத்தில் வாழ நேர்ந்தது அவரை இறுக்கமாகப் பிணைத்திருந்த அரசியல் ஆவேச உணர்வு நாளடைவில் நெகிழ்ச்சியடையவே அவர் அரசியல்வாதி என்ற நிலையி லிருந்து எழுத்தாளர் நிலைக்கு மாறினார். கடந்த முப்பது ஆண்டுகளாக பல்வேறு இடங்களிலும சுற்றித் திரிந்து பல்வேறு தரத்திலுள்ள மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களின நாடி ஒட்டகங்களையெல்லாம் நன்கறிந்த அனுபவச் செல்லராகத் தன் எழுத்துப் பணியைத் தொடர்நது கொண்டிருக்கிறார். அவர் சமுதாய அரங்கில் குறிப்பாக தனது இஸ் லாமிய சமூகத்தில் தான் நேரிடையாக காண்பவற்றைஅனுபவித்தவற்றையுமே தன படைப்புகளின் கருப்பொரு ளாக அமைக்கிறார். அவரது படைப்புகள் ஒவ்வொன்றி லும் ஏதேனுமொரு பகுதியில் அவரது சொந்த வாழ் வின சோகச் சாயை படிந்திருப்பதைக் காணலாம் அவலக் குரல் எழுப்பும்போக்கில் அவரது படைப்புகள் உருவாகி யிருந்தபோதிலும், வாழ்வை வெறுதது ஒதுக்கத் தூண்டு வதற்கு மாறாக வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உயர் சித்தாந்தத்தை இலைமறை காயாகப் போதிக்கும் முறை யிலே அவை அமைந்திருக்கின்றன எனத் துணிந்து கூற லாம் மேலும் அவற்றின் உயிரோட்டமாக ஆங்காங்கே நகைச்சுவையுணர்வு இழையோடிக் கொணடிருப்பது குறிப்பிடத்தக்க மறறொரு சிறப்பு அம்சமாகும் வாழ்வின் பிற்போக்குத் தன்மைகளையும் வாழ்வின்