பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229 நிலைமைகளை அப்பட்டமாகச் சித்தரிக்கும் புதினமே 'ன்றுப்பாப்பாய்ச் கொரானேண்டார்ந்து' (உன் தாத்தா வுக்கு ஒரு யானை இருந்தது) என்ற புதினப் படைப்பு. பழமைப் போக்கால் நலிந்து வரும் குடும்பமொன்றின் படப்பிடிப்பான இப்புதினத்தில், பிரத்தியட்ச நிலைமை களை சிந்தையிலிருத்தாது பொய்யான பழம் பெருமை களைப் பேசிக்கொண்டிருப்பதால் மேலும் நலிவே உண் டாகும் என்ற உண்மையை சிந்தைகொள் வழியில் சிறப் புற உணர்த்துகிறார் பoர். ஆண்மக்காரரின் செல்வ மகளான உம்மா எப்போதும் தான கொடிய வறுமையில் உழலும்போதுமகூட பழைய "ஆண்மக்கார் குடும்பப் பெருமைகளைச் சப்புக் கொட்டிக் கொண்டே கற்பனை யுலகில் காலங் கடத்துகிறாள். தனது மகள் பாத்துமாவை யும் அவ்வாறே பழம் பெருமை யுணர்ச்சியோடு வாழத் தூணடுவதன மூலம் அவள் வாழ்வையும் பாழடிகக முனைகிறாள். இதற்கு நேர்மாறான நிலையில் பண் பாடும் தூய்மையும் கல்வியும் நிறைந்த நிஸ்ஸார் அகமது வின குடும்பத்தைப் படைத்து இரண்டுக்குமிடையே உறவை உணடாக்கி பணபாடும் நாகரிகமும் குறைந்த குடும்பத்தை நாகரிகம் மிகுந்த நிஸ்ஸார் அகமது குடும்பம் பண்படுத்துவதாகக் கதைப் போக்கை அமைக்கிறார் ஆசிரியர் பஷீர், பழமைக்கும் புதுமைக்கும் இடையே யுண்டாகும் மோதல்களை அழகுறப் படம் பிடித்துக் காட்டுகிறார். எளிமையின உருவமான பாத்துமா எனற பாத்திரம் அற்புதப் படைப்பாக இப்புதினத்தில் அமைந்துள்ளது. பrரின் குறிப்பிடத்தக்க மற்றொரு படைப்பு கதா பீஜம் (கதை விதது) என்பதாகும. இப்படைப்பு ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையை அடித்தளமாகக் கொண்டு பின்னப்பட்டதாகும இதன் கதாநாயகன பoரின் வாழ்க் கையையே முழுமையாகப் பிரதிபலிப்பதைப் போன்றே "பாத்துமையுடெ ஆடு (பாத்துமாவின் ஆடு) என்ற