பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 அக்காதெமிப் பரிசு பெற்றவர்களிலேயே வயதில் குறைந்த வர் இவர் என்பது இங்குக் குறிப்பிடததக்கது கேரள சாகித்திய அக்காதெமியும் இவருக்குப் பரிசளித்துப் பாராட்டியுளளது. தெற்கு மலபாரில் உள்ள கூடலூரில் பிறந்த இவர் 1953ஆம் ஆண்டில் பாலககாட்டிலுளள விக்டோரியா கல்லூரியில் தம் பட்டப் படிப்பை முடி த் து க் கொண்டு இரணடாண்டுகள் அங்குமிங்குமாகப் பணி புரிந்து விட்டு, 1966ஆம் ஆண்டுவாக்கில் புகழ்பெற்ற மலையாள வார இதழான 'மாத்ருபூமி' துணை யாசிரியர் பொறுப்பில் அமர்ந்தார். இன்று அந்த வார ஏட்டின ஆசிரியராகத் திகழ்கிறார். இளமைதொட்டே இவருக்கு எழுத்தின் பால் ஒரு தனிக் கவர்ச்சி இருந்து வந்தது இவரது மூத்த சகோதரர் களும் எழுத்துத திறமை பெற்றவாகளாக இருந்தது இவரது எழுதது வேட்கையை மேலும தூண்டி வந்ததென லாம. கிடைக்கும் இலக்கிய இதழ்களையும் நூல்களையும ஆர்வத்தோடு படிக்கும இலா, அவைகளில் வெளியாகும் எழுத்தாளாகளின புகைப் படங்களை வெட்டியெடுதது சட்டமிட்டு சுவரில் வைப்பது இவரது பழக்கமாகும. இஃது இவரது எழுததார்வததிறகும் எழுததாள வேட் கைககுய ஏறற எடுத்துக்காடடாகும, பள்ளியில் படிக்கும்போது முளைவிட்டு வளர ஆரம்பித்த எழுதது வேட்கை, கல்லூரி நாட்களில் மலர்ந்து மனம் வீசத தொடங்கி விட்டது. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 1953ஆம் ஆண டில நூல வடிவம பெற்று வெளி வந்தது. அதே ஆண்டில அமெரிககாவின புகழ் பெற்ற ஆங்கில இதழான நியூயார்க ஹெரால்ட் டிரிப்யூன” நடத்திய உலகச் சிறுகதையாக இவரது சிறு கதை தோநதெடுககப்பட்டு பரிசளிக்கப்பட்டது.