பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குட்டிக்கிருஷ்ண மாரார் மலையாள இயக்கியத் திறனாய்வுத் துறையிலும் வள மான உரைநடை வளர்ச்சியிலும் தனக்கென தனிவழி கண்டு தனித்த முத்திரையைப் பதிததிருப்பவர் திரு. குட்டிக்கிருஷ்ண மாரார் அவர்கள் திறனாய்வுத் துறை பெரு வளர்ச்சிக்குக் காரணமாயமைந்தவர்களுள் குறிப் பிடத் தக்கவராகத் திகழும் மாரார். கடந்த முப்பதாண்டு களுக்கு மேலாக மலையாள இலக்கிய வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் இடையறாது பணியாற்றி வருபவராவார். மலையாள எழுத்தாளர்களிலே மிக முதிர்ந்தவராக விளங்கும் மாரார் சமஸ்கிருதத்தில் தன்னிகரற்ற தனிப் பெரும் புலமை பெற்றவர். இளமையிலேயே சமஸ்கிருத மலையாள மொழிப் புலமை நன்கு வாய்க்கப் பெற்ற இவர் தம் இருபதாவது வயதிலேயே எழுதத் தொடங்கி விட்டார் தொடக்க காலத்தில் இவர் பழைய மரபை அடியொற்றியே கட்டுரைகளை எழுதி வந்தார் இவரது இலக்கிய வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பெரு மாற்றத்துக்கு வழி வகுதத பெருமை மகாகவி வள்ளத் தோலையும், அககால எழுத்தாளர்கள் ஒா ஆதர் சன சக்தியாகத் திகழ்ந்த நாலாப்பாட் நாராயண மேனனையுமே சாரும். வள்ளத் தோலின் உறவு மாராரின சிந்தனையிலும் கருத்திலும மாற்றம விளைவித்தது போன்றே நாராயண மேனனின் நட்பு புதிய எழுத் துணர்ச்சிக்கு வழி வகுத்ததெனலாம். வெள்ளப் பெருக்கென இந்நாட்டினுள் புகுந்து மக்களின் உணர்ச்சிகளை சுண்டிவிட்டுக் கொண்டிருந்த