பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 இலக்கிய இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். மற்றும் சாரஸ் வத போதினி கைரளி முதலிய இதழ் களின் ஆசிரியராகவும் விளங்கியுள்ளார் ஐம்பதாண்டுகளுக்கு மேல் மலையாள இலக்கியத் துறைக்குப் பெருந்தொண்டாற்றி தனது முதுமையிலும் ஒய்வினறி உழைத்த அன்னாரது தொண்டைப் போற்றும் லகையில் இலக்கிய உலகம் அவருக்கு சாகித்திய குசலன்' எனப் பட்டமளித்துப் போற்றி வருகிறது. பல்கலைப் புலமையும் ஆழ்ந்த சிந்தனையும் குறைாத முயற்சியும் தளரா ஆர்வமும் ஒருங்கே பெற்று மலையாள இலக்கிய உலகின் குருதேவராகப் போற்றப்படும் இவரது பெயர் மலையாள இலக்கிய வரலாற்றில் அழியா முத்திரையாக விளங்கும் எனபது திணணம்.