பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 நிறை புலமை பெற்றதோடு எழுத்தாற்றல் மிக்க படைப் பாசிரியையாகவும் உருவானார், அக்காலத்தில் நாராயண மேனனின் இல்லம் மகாகவி வளளத்தோல் போன்ற கவிஞர்களின், சமூக சீர்திருத்தவாதிகளின் சங்கமத் தல மாக விளங்கியது. அத்தகைய பேரறிஞர்களின் வருகையும் கலந்துரையாடலும் பாலாமணியின சிந்தனைக்கும் செழுமைக்கும் இலக்கிய உணர்வுக்கும் உரமூட்டுவனவாக அமைந்தன எனலாம். மகாகவி வள்ளத்தோலின் அரிய முனனுரையுடன் வெளிவந்த கவிதைத தொகுப்பான "கூப்புகையே இவரது முதல் கன்னிப் படைப்பாகும. முதல் நூலே இவரது வளர்ந்துவரும் படைப்பாற்றல் திறனுக்கு தக்கதோர் சான்றாக அமைந்தது இவரது தததுவச் சிந்தனைக்கும் அழகுணர்சசியை பேராற்றலோடு வெளிப்படுத்தும திறனுக்கும தக்க உரைகல்லாக விளங்கும் இந்நூலைத் தொடர்நது இதுவரை பதினைந்திற்கு மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வடித்துத் தந்துள்ளார். அவற்றுள் மிகச் சிறந்த படைப்பாக விளங்குவது 'அம்ம’ (தாய்) கதைப் படைப்பாகும். கலையழகோடு தத்துவச் சிந்தனை கைகோாததுக் குதிபோடும் இந்நூல் மலை யாளக் கவிதை இலக்கிய உலகில் என்றும இறவாப் பெரும் புகழோடு வாழும் பெற்றியுடையதாகும். தாய்மை உணர்வை இவரளவுக்கு எதிரொலித்த கவிஞர்களை இலக்கிய உலகில் காண்பதரிது.பெண்களாகப் பிறந்த எல்லோருக்குமே இயல்பாயமைந்துள்ள தாய்மைப் பண்டை எல்லோராலும் எதிரொலிக்க முடிகிறதா? அதற்குத் தனி ஆற்றலும் மனப் பக்குவம் அன்றோ தேவைப்படுகிறது! அததகைய அருந்திறனை கருவிலே திரு'வாகப் பெற்று எதிரொலிப்பவர் பாலாமணியம்மா. தாயுள்ளத்தின் விரிவையும் பொங்கி வழியும் மகிழ்வை யும் எழிலோவியமாகத் தீட்டி படிப்போரின் உள்ளத் தை