பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253 இதமாகப் பண்படுத்திவிடுகிறது. இழையூடுபாவாக உள்ள தாய் சேய் உறவுத் தத்துவத்தை விணடுரைக்கும இவர் பேராற்றல் கணடு திகைத்து விடுகிறோம, பல்வேறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு தாய்மையின் சிறப்பினை விளக்குவதன் மூலம் படிப்போரின் சிந்தனையைத் தூண்டி விடுகிறார். 'தாய்மை நிலை வாழ்க்கையின் சிக்கல்களையும் குழப்பங்களையும் நன்கு புரிந்து கொள்ளச் செய்யும மிகச் சிறந்ததொரு பக்குவநிலை' என்பது அவரது அசைக்க முடியாத நயபிக்கை.அத்தகைய கருத்தின் அடிப்படையில் தாய் சேய் தொடர்பைக கொண்டு வாழ்வின் பல்வேறு சிக்கல்களையும எளிதாக விளக்கி விடுகின்றார். மனித இனத்தினபால் மட்டுல்லாது உயிருள்ள உயிரற்ற உலகங் களின்பாலும் தாயன்பு செலுத்தி, ஞானியர் கூறும் வாழ் வின் 'முழுமைக் காட்சி யைக் காணத் தூண்டுகிறார் "தாய்மை உணர்வு' எனும் அச்சில நம்பிக்கை’, * முயற்சி' எனும் இரு சக்கரங்களைக் கொண்டு விரைந்து ஒடும் இவரது கவிதை வண்டி வாழ்க்கை இன்பத்தின் முடி விடத்தை அடையத் துணை செய்வதாயுள்ளது. "குட்டிகளிடையில் (குழந்தைகளிடையே) என்ற கவிதை பரிவுணர்வு கொண்ட தாயுள்ளத்தின் தகை மையை அழகுறப் படப்பிடித்துக் காட்டுகிறது.உலக உயிா களனைத்தையும் ஒன்றாக நோக்கும் அனைத்துலக ஆத மாவைப் பெறுவதன் மூலம் அனைத்துலகத் தாய்மையை அடைய வழி வகுக்கிறார். "மாதரு ஹ்ருதயம் என்ற கவிதையில் குழந்தையைப் பெற்று வளர்தது பேரன்பு காட்டுவதால் மட்டும ஒரு பெண் உண்மையான தாய்மையை அடைந்துவிட முடி யாது எனறும் அழகுள்ளவைகளுடன் அழகற்றவற்றையும் உயிருள்ளவைகளுடன் உயிரில்லாதவற்றையும் ஒன்றாகப்