பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். கே. நாயர் 'மலையாளத் தமிழர் எனத் தமிழுலகாலும் தமிழ் மலையாளி' என மலையாள இலக்கிய உலகாலும் ஒருமுக மாக வர்ணிக்கப்படும் டாக்டர் எஸ். கே. நாயர் அவர்கள் மலையாளம்-தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ந்த புலமையாளராக இன்று திகழ்நது வருகிறாா. மலையாளதமிழ் இலக்கிய உலகின் இணையற்ற இணைப்புச் சக்தி யாக விளங்கும் இவர் உரையாசிரியர், திறனாய்வாளர், கவிஞர், கதாசிரியர், கட்டுரையாளர்,மொழி பெயர்ப்பாசி ரியர் எனப் பல்வேறு இலக்கியத் துறைகளிலும் தனக் கெனத் தனி வழி வகுத்து முத்திரை பதித்து வருபவரா வார். இலக்கியத் துறையால் இவர் பெற்ற பயனைக காட்டிலும் இவரது தொண்டால் இலக்கியத் துறை பெற்ற பயன் எண்ணிறந்தவையாகும். கருவிலே திரு' எனபதற்கிணங்க பள்ளிப் பருவத் திலேயே மலையாள மொழி இலக்கியத்தினபால் இவருககு அளவற்ற ஆர்வம ஏறபட்டுவிட்டது இன்னும் சற்று உயர்வு நவிற்சியாகக் கூற வேணடுமான்ால் இளமையி லேயே இவர் உளளததில் இலககிய உணர்வு கொழுந்து விட்டெரிய தொடங்கிவிட்டதெனலாம். கையில் கிடைக் கும் மலையாள மொழி இலக்கிய ஏடு எதுவாயினும் அதை ஆழ்ந்து படிதது இனபுறுவதோடு, தான அனுபவிக் கும் இலக்கிய இன்பத்தைப் பிறரிடம் கூறிப் பேருவகை கொள்வது இவரது வழககமாகும். கேரளத்திலுள்ள ஆல்வாயில் 1917ஆம் ஆண்டில் சாதாரண ஏழைக் குடும்பமொனறில் பிறந்த திரு. நாயர் வறுமைக்கும் புலமைக்குமிடையே ஊசலாடும் பெண்டுல மாகவே தம் இளமைக் காலப் படிப்பை முடித்தார். பள்ளி யில் படிக்கும்போதே புலமை மிகுந்தவராகத் திகழ்ந்த இவர் தம சக மாணவர்களுக்கு ட்யூஷன்" சொல்லிக் கொடுத்து அதனமூலம் வரும் வருமானத்தைக் கொண்டே